Share via:
கரூர் சம்பவம் நடந்தபிறகு விஜய் வெளியில் எங்கேயும் வரவே இல்லை.
அவரது நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்ததாகவும், பாஜக ஸ்கெட்ச் போட்ட வழியிலே
விஜய் வீடியோ வெளியிட்டு திமுக அரசை குற்றம் சாட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து
விஜய்யைக் காப்பாற்றவும் திமுகவை குறை கூறவும் நேரடியாகவே பாஜக களம் இறங்கிவிட்டது.
இதுகுறித்து பேசும் திமுகவினர், ‘’வீட்டில் உட்கார்ந்து இந்த வீடியோவைப்
போடுவதற்கு விஜய்க்கு மூன்று நாட்களாகியிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு பத்திரிகையாளர்
சந்திப்பை நடத்த துப்பில்லை. ஏனென்றால் அங்கே கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியிருக்கும்.
இந்த வீடியோவிலோ ‘8.45 நாமக்கல் கூட்டத்துக்கு ஏன் சென்னையில் இருந்து 8.45க்கு கிளம்பினீர்கள்??’,
‘ஏன் கரூரில் 7 மணி நேரம் மக்களைக் காத்திருக்க வைத்தீர்கள்’, ‘முழுநேர அரசியலுக்கு
வந்தபிறகு எதற்கு வாரத்தின் 5 நாட்கள் மக்களைச் சந்திப்பதில் என்ன கேடு?’ என்று எந்தக்
கேள்விக்கும் பதில் அளிக்கத் தேவையில்லை…’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதனாலே விஜய்யை பாதுகாப்பதற்கு தமிழகம் வந்துவிட்டது பாஜக உண்மை
கண்டறியும் குழு. இந்த குழு பற்றியும் கண்டனம்
வந்திருக்கிறது
பாஜக team ஒன்னு NDA கூட்டணி சார்பாக கரூர் வந்துள்ளது. அதிலிருக்கும்
சிலர் பற்றிய குறிப்புகள் உங்களுக்காக.. 1) ஹேமமாலினி – பெரிய விழாக்கள் நடக்கும் போது
கூட்ட நெரிசல் ஏற்பட்டு இறப்பது சாதாரணம். இதையெல்லாம் ஒரு விஷயமாக செய்தி போடலாமா?
– கும்ப மேளாவில் 37 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த போது ஹேமா மாலினி கருத்து.
2) அனுராக் தாக்கூர் – CAA விற்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கியால் சுடுங்கள்
(Goli maaro) என மக்களிடம் கூறியவர் 3) தேஜஸ்வி சூர்யா -கடந்த 100 ஆண்டுகளாக, 95% இசுலாமிய
பெண்கள் காம உணர்ச்சியின் உச்சத்தை அடைவதில்லை என பதிவு போட்டு, உலக நாடுகள் எதிர்ப்புக்கு
பின் மன்னிப்பு கேட்டவர்.. Flight கதவை திறந்து விளையாடிப் பார்த்து பிரச்சினைக்குள்ளானவர்.
இத்தனை பேரும் சேர்ந்து விஜய்யைக் காப்பாற்றவும் திமுகவை குற்றம்
சாட்டவும் ஒன்று கூடியிருப்பதை பார்க்கையில், விஜய் வசமாக சிக்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.