Share via:
விஜய் வீடியோ வெளியானதும், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்
அமுதா ஐ.ஏ.எஸ்., தீரஜ்குமார் மற்றும் டேவிட் ஆசிர்வாதம் ஆகியோர் வீடியோ வெளியிட்டனர்.
இதையடுத்து, கடும் சர்ச்சைகள் உருவாகிவிட்டன.
அதாவது, ஆணையம் அமைத்தாகிவிட்டது. அந்த ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் திடீரென்று அமுதா அவர்கள் எதற்காக தனி விளக்கம் அதுவும் ஆணையம் விசாரித்துக்கொண்டு
இருக்கும் இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியை எடுத்துவைத்தார்.
அமுதா கொடுத்த பேட்டியில்
இருந்த முரண்பாடு இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தவெகவினர் 10,000 பேர் வருவார்கள்
என கடிதம் கொடுத்தார்கள், இருந்தாலும் காவல்துறைக்கு 20,000 பேர் வரலாம் என உளவுத்துறை
அறிக்கை கொடுத்தது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் பாதுகாப்பு அளிப்போம், இங்கு
20 பேருக்கு ஒருவர் என 10,000 பேருக்கு 500 பேர் பாதுகாப்பு அளித்தோம். விஜய் அவர்கள்
சம்பவ இடத்திற்கு வரும் பொழுது 25,000 பேர் இருந்தார்கள் ஆக, இவர்கள் கூற்றுபடியே
20 பேருக்கு ஒரு காவலர் தேவை என்று வைத்து கொண்டால் 1,250 காவலர்கள் அங்கு இருந்திருக்க
வேண்டும். உண்மையில் 500 காவலர்கள் இருந்தார்களா என்பதே கேள்வியாக இருக்கிறது என்று
வெளுத்து வாங்குகிறாகள்.
இப்படி பொய் தகவல்கள் கொடுப்பதற்குப் பதிலாக திமுகவில் சேர்ந்துவிடுங்கள்
என்று அமுதா மீது வன்மம் கக்குகிறார்கள்.
அமுதாவைக் காப்பாற்றுவதற்கு திமுகவினர் வரிசை கட்டி வருகிறார்கள்.
இது குறித்து பேசுபவர்கள், ’’கரூர்
அசம்பாவிதம் திட்டமிட்ட சதியென வதந்தி பரவுகிறது..வழக்கு தொடர்கிறார்கள்..
முதலமைச்சரும்,அமைச்சர்களுமா
நீதிமன்றத்தில் Affidavit தாக்கல் செய்வர் ? அதிகாரிகள் தான் பொறுப்பு.. அவர்கள் தான் பேசுவர்
இல்ல..எனக்கு புரியல.. இந்த நாட்டில் அதிகாரிகள் என்னமோ விளக்கமே தராதது போலவும்,, தமிழ்நாட்டு அதிகாரிகள் மட்டும் தான் தருவது போலவும்
பொய்யான பிம்பத்தை உருவாக்க சிலர் முயல்கிறார்கள்..
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட
காலத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளராக இருந்த சக்திகாந்த் தாஸ்,RBI கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் தான் பேட்டி கொடுத்தனர்..
கோவிட் பெருந்தொற்று காலத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர்கள் தான் தினந்தோறும்
விளக்கமளித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு
பின்,பாகிஸ்தானிடம் மாட்டிக்கொண்ட அபிநந்தன் மீட்பு நடவடிக்கைகள்
குறித்து ராணுவ அதிகாரிகள் தான் விளக்கமளித்தனர் பெஹல்காம் தாக்குதல்-பதிலடி
குறித்தும் ராணுவத்தளபதிகள் தான் விளக்கமளித்தனர். கும்பமேளா கூட்டநெரிசல்
மரணங்கள் தொடர்பாக கூட உபி அரசு அதிகாரிகள் தான் விளக்கமளித்தனர் … ஆனால்,தமிழ்நாட்டில் மட்டும் அரசு அதிகாரிகள் விளக்கம் கொடுத்தால்
தனிப்பட்ட வன்மத்தை வாரிக்கொட்டுவது சைக்கோத்தனம்’’ என்கிறார்கள்.