Share via:
பெரியாரை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நடிகர் விஜய், விநாயகர்
சதுர்த்திக்கு வித்தியாசமான ஒரு வாழ்த்து தெரிவித்தார். அதாவது, விநாயகர் சதுர்த்தியை
கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். அதாவது விஜய் மாற்று
மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலே இப்படி வாழ்த்து கூறியிருந்தார்.
ஆனால், அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் போய்விட்டார்கள். கிறிஸ்தவரான
விஜய்யை பிள்ளையாராக சித்தரித்து சிலை வைத்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பாஜகவினரை
கொதிக்க வைத்திருக்கிறது.
பிள்ளையாரை முதல்வர் சேரில் அமரவைத்து, கையெழுத்து போடுவது போன்று
வைத்திருக்கிறார்கள். பிள்ளையார் சட்டையில் விஜய் படத்தையும் வைத்திருந்தார்கள். இந்நிலையில்
இந்த சிலைக்கு பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே, இப்போது முதல் அமைச்சர் என்பதை
எடுத்துவிட்டு விஜய் படத்தையும் எடுத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த எலிக்கு புஸ்ஸி
ஆனந்த் என்று எழுதியிருந்ததையும் எடுத்துவிட்டார்கள்.
கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் ரசிகர்கள் பிள்ளையார் பிரச்னையில்
விஜய்யை இழுத்து விட்டிருக்கிறார்கள். இந்த காமெடியே இப்போது வைரலாகிவருகிறது.