Share via:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலசப்பாக்கம்,
போளூர், அணைக்கட்டு தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசினார். அணைக்கட்டு பேருந்து நிலையம்
அருகே குழுமியிருந்த மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தத் தொடங்கிய நேரத்தில் ஒரு
ஆம்புலன்ஸ் வந்தது.
அதை பார்த்தவுடன் எடப்பாடி பழனிசாமி கோபமாகிவிட்டார். ஏனென்றால்,
அவர் ஏந்தெந்த தொகுதிகளில் பேசத் தொடங்கினாலும் அங்கே இடையூறாக ஆம்புலன்ஸ் வந்துவிடுகிறது.
ஆகவே எடப்பாடி, ‘’நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு
நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்யும் கேவலமான செயலை இந்த அரசாங்கம்
செய்துவருகிறது. எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் எதுவும் செய்யமுடியாது.
தில்லு திராணி இருந்தால் அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். மக்கள்
கூட்டத்துக்கு இடையில் இப்படி வந்தால் மக்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது..?
ஆம்புலன்ஸ்ல நோயாளி யாருமே இல்லாமல், வெறுமனே போகிறது. இதை 30 கூட்டத்தில் பார்த்துவிட்டேன்.
அடுத்த முறை பேஷன்ட் இல்லாமல் வெறும் ஆம்புலன்ஸ் வந்தால், யாரு ஓட்டுகிறாரோ, அவரையே பேஷன்டாக ஏற்றிச்செல்லும் நிலை உருவாகும். எதிர்க்கட்சியின்
கூட்டம் நடக்கிறது என்றால் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இது குறித்து நாளை
காவல் துறையிடம் புகார் கொடுப்போம். மக்களுக்கு தீமை செய்யும் ஆட்சியாகத்தான் இருக்குது
திமுக ஆட்சி…’’ என்று கடுமை காட்டினார்.
எப்போதும் எல்லாவற்றையும் டேக் இட் ஈஸி என்று எடுத்துக்கொள்ளும்
எடப்பாடி பழனிசாமியே இப்படி டென்ஷன் ஆகிறார் என்றால், திமுக அத்தனை தூரம் குடைச்சல்
கொடுக்கிறார்கள் என்றே அர்த்தம் என்கிறார்கள். நேரடி மோதல் சூடுபிடிக்கிறது.