Share via:
நடிகர் விஜய் இன்று நடத்தும் இரண்டாவது மாநில மாநாடு மிகப்பெரும்
அளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரையை
நோக்கி ரசிகர்கள் ஓடோடி வருகிறார்கள். பத்திரிகை, மீடியா, சமூகவலைதளங்களில் இதுவே டிரெண்டிங்
ஆகியுள்ளது.
மதுரை பாரபத்தியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது
மாநில மாநாடு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக முடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம்
3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால்,
காலையிலே கூட்டம் அதிகரிப்பதால், சீக்கிரமே மாநாடு நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உண்டு
என்று சொல்லப்படுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு விஜய் நேற்று மாலையே மதுரை வந்தடைந்தார்.
சென்னையில் இருந்து காரில் வந்த விஜய், மதுரை சிந்தாமணி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில்
தங்கி உள்ளார். விஜய்யின் அப்பா எஸ்.வி. சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா ஆகியோரும்
மாநாட்டில் கலந்துக்கொள்ள மதுரை வந்துள்ளனர்.
மாநாட்டு மேடையின் உச்சியில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது
என்ற வாசகம் மற்றும் எம்.ஜி.ஆர், அண்ணா, விஜய் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொண்டர்களை
நடந்து சென்று விஜய் பாக்க, சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ரேம்ப் வாக் அமைப்பட்டிருக்கிறது.
தொண்டர்கள் விஜய் பேசுவதை பார்க்க ஆங்காங்கே எல்இடி டிவி பொருத்தப்பட்டிருக்கிறது.
சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில், இருக்கைகள் போடப்பட்டுள்ளன. குடிநீர், மருத்துவ
வசதி, சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், 300 பவுன்சர்கள் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
. மாநாட்டு நடந்தும் இடத்திற்கு அதிகாலை முதலே தொண்டர்கள் குவியத்
தொடங்கி உள்ளனர். இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கு வரும் வழி நெடுகிலும் உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மாநில மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டியில் கட்சியின் இலக்கு மற்றும் எதிரிகள் யார் என்பது குறித்து விஜய் பேசினார். இன்றைய மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிப்பு வெளியிடுவார் என்று சொல்லப்படுகிறது. பாஜகவும் அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு அழைப்பு விடுக்கிறது. இதற்கு பதில் சொல்வார் என்றே சொல்லப்படுகிறது