Share via:
சீமான் கூட்டத்தில் தளபதி, தளபதி என்று விஜய் பெயரைக் கூறியவரை,
மேடையில் இருந்து இறங்கிவந்து அடித்த சம்பவம் செம வைரலாகிவருகிறது. குடி போதையில் சீமான்
இப்படி செய்திருப்பதாக விஜய் கட்சியினர் செய்தி பரப்பிவருகிறார்கள்.
சீமான் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் டிவிகே, டிவிகே என்று சிலர்
கத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசியசீமான், ‘புலி வேட்டைக்குச் செல்லும்
வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள், ஓரமாக போய்
விளையாடுங்கள், குறுக்கே வராதீர்கள்’ என்று பேசியிருந்தார்.
இதையடுத்து இவர் பேசிய நேரத்தில் டிவிகே என்று கத்தியதால் இறங்கிவந்து
அடித்திருக்கிறார். இது குறித்து சீமான் எதிர்ப்பாளர்கல், ‘’பவுன்சர்கள் என்ற பெயரில்
சிலரை வைத்துக் கொண்டு தன்னை மீறி யாரும் கேள்வி கேட்டால் அவர்களை அங்கிருந்து இழுத்து
வெளியே தள்ளும் வேலையை தான் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் செய்வார். அதே போல
இன்றும் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை சீமானின் பவுன்சர் படை தாக்கியிருக்கிறார்…
மேலும் கடும் குடிபோதையில் அப்படி நடந்துகொண்டார்’’ என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு நாம் தமிழர் கட்சியினர், ‘’பத்திரிகையாளர் ஒருவர் கூட்டத்திற்கு
வந்துவிட்டு வெளியே போய்விட்டார். அவர் மீண்டும் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுத்த நேரத்தில்
அவர் மற்றவர்களை அழைத்தார். இந்த நேரத்தில் கூட்டத்தில் பேசுவதற்கு சிக்கல் வருவதை
விரும்பாத அண்ணன் இறங்கி கண்டித்தார்’’ என்கிறார்கள்.
பத்திரிகையாளர் என்றாலும் அடிக்கலாமா..? கோபத்தைக் கட்டுப்படுத்த
முடியாத சீமான் எப்படி கட்சியையும் நாட்டையும் காப்பாற்றப் போகிறார்..?