News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார்.

பின்னர் ஜீன் ஜோசப் கூறும்போது, “தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யாத ஆளுநரிடம் பட்டம் பெற எனக்கு விருப்பமில்லை” என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் இதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை, ‘’நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்நிலையில் கவர்னர் வழங்கும் சுதந்திரதின விருந்தில் நடிகர் விஜய் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.. கடந்த ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்காத நிலையில் இந்த முறை பங்கேற்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. அவரை எப்படியாவது கவர்னரை சந்திக்க வைக்க கடும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. விஜய் சிக்குவாரா..?

இந்நிலையில் இஸ்லாமியரை வம்பிழுக்கும் வகையில் சுதந்திரத்தின பதிவு ஒன்று போட்டிருக்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. அந்த பதவில், ‘’ பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது. முஸ்லிம் லீக்கால் ‘காஃபீர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link