Share via:
தமிழக பாஜகவில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய பதவி அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன்,
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையிலான நிர்வாக குழுவின் பரிந்துரையின்
பேரில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன் ஸ்ரீநயினார்
பாலாஜிக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
நயினார் நாகேந்திரன் மகனுக்கு தமிழக பா.ஜ.க. விளையாட்டு மற்றும்
திறன் மேம்பாட்டுப் பிரிவின் அமைப்பாளராக மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின்
மகன் நயினார் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 25 அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை
நியமித்து நயினார் அறிவித்துள்ளார்.
திமுகவை வாரிசு அரசியல் என்று பாஜகவினர் தொடர்ந்து குற்றம் சுமத்திவரும்
நேரத்தில் நயினார் நாகேந்திரன் மகனுக்கு நயினாரே பதவி கொடுத்து கெளரவம் செய்திருப்பது
கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலையின் ஆதரவாளராக இருந்த
அமர்பிரசாத் ரெட்டியின் பதவியை குறிவைத்து காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த பட்டியலில் ஒரே ஒரு இஸ்லாமியர் அல்லது கிறிஸ்துவர்
பெயரும் இடம் பெறவில்லை என்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. இதையடுத்து கட்சியில் இருந்து
வெளியேறும் முடிவை அலிஷா உள்ளிட்ட சிலர் எடுப்பதாக சொல்லப்படுகிறது.
எல்லாமே அண்ணாமலையின் கைவண்ணம் என்று நயினார் தரப்பு அமைதி காக்கிறது.