Share via:
எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் விதித்த பத்து நாள் கெடு
கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் செங்கோட்டையனை கட்சியில்
இருந்து வெளியேற்றுவதற்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
செங்கோட்டையன் எழுப்பியிருக்கும் விவகாரம் குறித்து பேசும் அதிமுகவினர்,
‘’பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது. எந்தக்
காலத்திலும் பழனிச்சாமி அவர்கள் டிடிவி ஓபிஎஸ் சசிகலா ஆகியோரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள
மாட்டார்.
எல்லோரும் தேவர் சமுதாய வாக்கு வங்கியில் பாதிக்கப்படும் என்று
சொல்கிறார்கள். ஆனால் டிடிவி, ஓபிஎஸ் அவர்களிடம் இருப்பது மிக குறைந்த சதவிகிதம் தான்.
இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அவர்கள் இரட்டை இலை சின்னம் இல்லாமல் ஒரு சட்டமன்ற
தொகுதியில் வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் இல்லை.
அதேநேரம், தென் மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள்
மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்கள் என பெரும்பாலும் தேவர் சமூகத்தினர் தான். சி
சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் செல்லூர் ராஜு ராஜன் செல்லப்பா ஆர்பி உதயகுமார் இசக்கி
சுப்பையா போன்றவர்கள் எல்லோருமே பழனிச்சாமி அவர்களை ஆதரித்து தான் களம் காண்கிறார்கள்.
டிடிவி ஓபிஎஸ்ஓ அதிமுகவின் பழனிச்சாமி அணிக்கு கொண்டுவந்து சேர்க்கப்போகும்
ஓட்டுகள் குறைவு. ஆனால் அவர்கள் உள்ளே வருவதால் ஏற்படும் குழப்பங்கள் அதிகம். கோவை திருப்பூர் சேலம் என மற்ற மேற்கு மாவட்டங்களில்
வலுவான தலைவர்கள் அதிமுகவிற்கு இருக்கிறார்கள். எனவே செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் சுயேட்சையாக
போட்டியிட்டால் வெற்றி பெறவே முடியாது. இது பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றாக தெரியும்.
நிச்சயம் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்.
எனவே, இன்று செங்கோட்டையனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு கட்சியிலிருந்து
கல்தா கொடுக்கப்படுவார் என்பது உறுதியாகிறது.