Share via:
பிரதமர் நரேந்திர மோடி பண மதிப்பிழப்பு அறிமுகம் செய்த காலத்தில்
450 கோடி ரூபாய்க்கு வி.கே.சசிகலா சர்க்கரை ஆலை வாங்கியிருப்பதாக சிபிஐ பதிவு செய்திருக்கும்
வழக்கு புதிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பாஜகவினால் சிறைக்குப் போன சசிகலா இப்போது பாஜக ஆதரவாளராக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் பண மதிப்பிழப்பு காலத்தில் சொத்து வாங்கியிருக்கும் விவகாரம் சிபிஐ
பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ்
லிமிட்டெட் என்ற சர்க்கரை ஆலை நிறுவனம் மீது ஏராளமான புகார்கள் வெளியாகின. இதையடுத்து
உயர் நீதிமன்றம் உத்தரவின்பேரில் பத்மாதேவி சுகர்ஸ் லிமிட்டெட் மீது சிபிஐ வழக்குப்பதிவு
செய்து விசாரணையில் ஈடுபட்டது.
இந்நிலையில் சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகி
உள்ளது. அதில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா பணமதிப்பிழப்பு
காலத்தில் ரூ.450 கோடி பழைய ரூ.500, ரூ.1000 ரொக்கம் கொடுத்து அந்த சர்க்கரை ஆலையை
வாங்கியிருப்பதாகவும், அது பினாமி பெயரில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக
கூறியுள்ளது.
பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் நிதி மேலாண்மையில் இருந்த
ஹிதேஷ் ஷிவ்கன் படேல்,சர்க்கரை ஆலையை விற்பனை செய்வதற்காக 450 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையிலும், அந்த சர்க்கரை ஆலையை சசிகலா
பினாமி பெயரிலேயே வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. இன்னமும் எத்தனை
கோடிகள் முறைகேட்டில் சிக்கியிருக்கிறதோ..?