Share via:
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் தொடர்ந்து
குற்றம் சாட்டி வரும் நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது
கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில்
மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத்
தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி அவரது மற்றும் மூத்த மகன் தங்கராஜாவும்
மற்றொரு மகனும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து
வந்துள்ளது. இந்நிலையில், தந்தை மூர்த்தி, தங்கபாண்டி, மற்றொரு மகன் மணிகண்டன் ஆகிய
மூவரும் செவ்வாய்க்கிழமை இரவு மது அருந்தி உள்ளனர்.
அப்போது, தந்தை மகன்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது,
மூர்த்தி காவல் உதவி எண்ணான 100-க்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து,
சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலுக்கு
இந்த புகாரை விசாரிக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிக்கனூத்து கிராமத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர்
சண்முகவேல் மூர்த்தி மற்றும் ஆயுதப்படை காவலர் அழகுராஜ் ஆகியோர் மூர்த்தியிடமும் அவரது
மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் விசாரணை நடத்தி உள்ளார். அந்த நேரத்தில் காயமடைந்திருந்த
மூர்த்திக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதால், அவரை ஆம்புலன்சில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மகன்கள் இருவரையும் கைது செய்வதற்கு முயற்சி செய்திருக்கிறார்.
ஜெயிலுக்குப் போகவேண்டி வரும் என்று ஆத்திரமடைந்த தங்கபாண்டி,
அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் அரிவாளைக் கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை
துரத்தி உள்ளார். தந்தை மூர்த்தியும் அவர்களுடன்
சேர்ந்துகொண்டு தாக்கியுள்ளார். நிலைமை கை மீறிப்போவதை அறிந்துகொண்ட சண்முகவேலு தங்கராஜாவிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருந்தபோதிலும்
விடாமல் சண்முகவேலுவை துரத்திய தங்கராஜாவும், அவரது சகோதரரும் சண்முகவேலுவை ஓட ஓட வெட்டி
உள்ளனர். இதில், கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே
சண்முகவேலு உயிரிழந்தார்.
இதைக் கண்ட ஆயுதப்படை காவலர் அழகுராஜையும் வெட்டியிருக்கிறார்,
அவர் உயிர் பிழைக்கத் தப்பியோடியிருக்கிறார். சம்பவ இடத்தில் ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன்,
காவல் கண்காணிப்பாளர் கிரீஷ்குமார் யாதவ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடியவர்களை
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் உடுமலைப்பேட்டையில் உயிரிழந்த காவல் துறை எஸ்.ஐ.சண்முகவேல்
குடும்பத்தினருக்கு அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், திட்டமிட்டு அதிமுக எம்.எல்.ஏ. மீது பழி போடுவதற்கு திமுகவினர் முயற்சி செய்துவருகிறார்கள்.
தமிழகத்தில் போதை நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனலே கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காவல்
துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. அதனால்
திமுக அரசின் மீதும் அதன் காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு அச்சமில்லாத நிலைமை
நிலவுகிறது. இனியாவது ஸ்டாலின் விழித்துக்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கவில்லை
என்றால் தமிழகத்தில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இருக்காது.