Share via:
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான பஞ்சாயத்தில் பாமக பஞ்சராகிக்
கிடக்கிறது. இந்நிலையில் அன்புமணி கூட்டயிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை
விதிக்காமல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது செய்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்போது பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார் அன்புமணி. பாஜகவை நம்பினோர்
கைவிடப்பட மாட்டார்கள் என்பது போன்று அன்புமணியை கூட்டணியில் சேர்ப்பதற்கு வசதியாக
ராமதாஸ் ஓரம் கட்டப்பட்டுள்ளார். சசிகலாவைப் போன்று ராமதாஸை ஓரம் கட்டும் முயற்சிகள்
நடக்கின்றன. எல்லாம் பாஜக திருவிளையாடல் என்கிறார்கள்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை மாமல்லபுரத்தில் பொதுக்குழு
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரையும் நேரில்
ஆஜராகி வாக்குமூலம் பெற்றார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். டாக்டர் அன்புமணி
ராமதாஸ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி சில மணி
நேரம் ஒத்திவைத்த நிலையில் 8.30 மணி அளவில் தீர்ப்பை அறிவித்தார். மே மாதமே அன்புமணியின்
தலைவர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகவும், இருப்பினும் அவர் தலைவராக தொடர்வதில் எந்த ஒரு
சட்ட சிக்கலும் இல்லை என்று குறிப்பிட்டார். எனவே அன்புமணி பொதுக்குழு உறுதியாகிவிட்டது.
ராமதாஸ் ஆரம்பத்தில் பாஜகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் கருத்து கூறினார்.
ஆனால் அதிமுகவும், பாஜகவும் இன்றைக்கு ஒரே கூட்டணியில் இணைந்துவிட்ட பிறகு, அவரது கருத்து
தற்போதைய சூழலுக்கு ஏற்புடையதல்ல. திமுகவை எதிர்க்கும் பணியில் தீவிரம் காட்டாமல்,
அன்புமணியை ஒடுக்கி, மருத்துவர் ராமதாஸ் என்ன சாதிக்கப்போகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால், டாக்டர் ராமதாஸ் இதை சும்மா விடப்போவதில்லை. பாமகவை விட்டுத்தர
மாட்டார் என்றே சொல்கிறார்கள். இந்த விரிசல் மேலும் மேலும் அதிகமாகிறது. புதுக் கட்சி
தொடங்கி அன்புமணியை எதிர்ப்பாரா அல்லது அன்புமணி ஆதரவாளர்களை வளைப்பாரா என்பதையே பார்க்க
வேண்டும்.