Share via:
எம்.ஜி.ஆரை உருவாக்கியது பிராமணர்கள், திராவிட இயக்கத்தில் பிராமணியத்தை
நுழைத்தவர் எம்.ஜி.ஆர். என்று திருமாவளவன் பேசிய விவகாரம் படுவைரலாகி வருகிறது. இனி,
அதிமுக கூட்டணியில் அவர் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலைமை உருவாகியிருக்கிறது.
அதேநேரம், பிராமணியமே அதிமுகவை உருவாக்கியது, காப்பாற்றியது என்று
கூறும் நடிகை கஸ்தூரி, ‘’பொன்மனச்செம்மல் தமிழ்நாட்டின் ஒப்பற்ற நாயகன் புரட்சித்தலைவர்
எம்ஜிஆரை உருவாக்கியதே பார்ப்பனிய கும்பல்தான் என்று உரத்து கூறிய விசிக தலைவர்களுக்கு
பார்ப்பனர்கள் சார்பாகவும் பார்ப்பனியம் சார்பாகவும் நன்றி’’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் எம்.ஜி.ஆர். பார்ப்பணியத்தை ஆதரிக்கவில்லை என்று கூறுபவர்கள்,
‘’எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை அவர் ஜெயலலிதாவையோ அல்லது வேறு யாரையும் அடையாளம்
காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதே ஜெயலலிதா
எம்.ஜி.ஆருக்கு எதிராக செயல்பட்ட வரலாறு இருக்கு. எம்.ஜி.ஆர். மறைந்த பின் கட்சி இரண்டாக
உடைந்து, எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மாவை பின்னுக்கு தள்ளி தனது சொந்த முயற்சியில்
மக்களை சந்தித்து முதலமைச்சர் ஆனவர் தான் ஜெயலலிதா அம்மையார் அவர்கள். யாருடைய காலிலும்
தவழ்ந்து வந்து முதல்வர் ஆகவில்லை… எனவே வரலாறு தெரியாமல் உளறக்கூடாது…’’ என்றார்.
அதேநேரம், திருமாவளவன் இதுவரை எப்படியெல்லாம் அரசியல் செய்திருக்கிறார்
என்ற தகவல் அதிர வைக்கிறது.
1) தமாகா – (விசிக சந்தித்த முதல் தேர்தல் 1999-2001)
2) திமுக-பாஜக (தேஜகூ) (2001-2004) திருமாவளவன் தனது விசிக கட்சியின்
சார்பில் முதல் முறையாக தமிழக சட்டமன்றத்திற்குச் சென்றார்.
3) விசிக – ஐஜத மக்கள் கூட்டணி (2004-2006)
4) அதிமுக- விசிக (ஜனநாயக மக்கள் கூட்டணி) : (2006-2006)
5) திமுக – காங்கிரஸ் (ஐமுகூ) (2009)
6. மக்கள் நலக் கூட்டணி (2015-2016)
7. திமுக காங்கிரஸ் கூட்டணி (2019 முதல்)
இந்த முறை அதிமுகவில் நுழைவார் என்ற நிலைமை மாறிவிட்டது. ஆகவே,
மீண்டும் திமுக கூட்டணியில் தொடரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டார். எம்.ஜி.ஆரை
பேசி எடப்பாடியை கோட்டை விட்டுவிட்டார்.