Share via:
எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் இஸ்லாமிய தொப்பிகள் வழங்கப்படுவதும்
அதை அவர் அணிந்துகொண்டு போஸ் கொடுப்பதும் வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் எடப்பாடிக்கு
சிறுபான்மை வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா என்பது கேள்வியாகிறது.
இது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘’கடந்த 2021 சட்டமன்ற
தேர்தலில் திமுக கட்சிக்கு 69சதவீத முஸ்லீம் வாக்குகள் திமுகவிற்கு சென்றது,25 சதவீதம்
அதிமுக கட்சிக்கு வந்தது பிற கட்சிகள் 6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த முறை
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சிக்கு 30-35 சதவீதம் முஸ்லீம் வாக்குகளும்
(2021-25 %அதிமுக வாங்கியது) நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு
12-15 சதவீதம் முஸ்லீம் வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 5 சதவீதம் வாக்குகளும் செல்வதற்கு
வாய்ப்பு உண்டு.
திமுக கட்சி 45-50 சதவீதம் முஸ்லீம் வாக்குளை பெற்றாலும் போன முறையை
விட 20 சதவீதம் முஸ்லீம் மக்கள் வாக்குகளை இழக்கும். அதேப் போல் கிறிஸ்துவ மக்கள் வாக்குகளை
போன 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கட்சி 38 சதவீதமும் திமுக கட்சி 56 சதவீதமும்
பெற்றது. ஆனால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி 40 சதவீதம் வாக்குகளையும்,
திமுக கட்சி 30-35சதவீதம் வாக்குகளையும் தமிழக வெற்றிக் கழகம் 20-25சதவீதம் வாக்குளையும்
பெறும். பாஜக கூட்டணியால் கிறிஸ்துவ மக்கள் வாக்குகள் முஸ்லீம் மக்கள் வாக்குகளை போல்
திமுகவிற்கு பெரிதாக செல்வதில்லை.போன 2021 சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி
அவர்கள் முதலமைச்சராக அறிவித்த தேர்தலில் அதிமுகவை விட திமுக 15 சதவீதம் வாக்குகளையே
அதிகம் பெற்றது.
அடுத்து போன முறை பட்டியலின மக்கள் வாக்குகள் 70 சதவீதம் திமுக
கட்சிக்கு சென்றது இந்த முறை அதிமுக,திமுக,தமிழக வெற்றிக் கழகம் என்று மூன்றாக பிரியும்
போது அதிமுக 40 சதவீதமும்,திமுக 40 சதவீதமும் தமிழக வெற்றிக் கழகம் 15 சதவீதமும் பெறும்.
இதில் முக்கியமாக முஸ்லீம் கிறிஸ்தவ பட்டியலின மக்கள் வாக்குகளை பெரும்பான்மையாக போன
2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சென்றது ஆனால் இந்த முறை வாக்குகள்பிரியும் போது
திமுக கூடடணியின் வாக்கு சதவீதம் இன்றைய அரசியல் சூழ்நிலையில் திமுக ஆதரவு ஊடகங்கள்
எடுத்த சில சர்வேக்களின்படி 36சதவீதமாக குறைந்துள்ளபோது .
அதே எதிர்கட்சியான அதிமுக+பாஜக கூட்டணி மட்டும் 33 சதவீதமாக இருக்கும்போது
இதில் இன்னும் அதிமுக கூட்டணியில் இன்னும் இரண்டு கட்சிகள் சேரும் போதும் 41-43 சதவீதமாக
அதிமுக கூட்டணி வலிமைப்பெறும். அதேப்போல் திமுக கூட்டணியில் ஆட்சி மீது அதிருப்தி அதிகரிக்க
கடைசி இரண்டு மூன்று மாதத்தில் திமுக கூட்டணியின் வாக்குசதவீதம் 35 சதவீதமாக குறையவே
வாய்ப்புள்ளது..’’ என்கிறார்கள்.
ஆக, அரசியல் கணக்குகள் மாறுகிறது.