Share via:
வட தமிழகத்தில் 100 நாட்களுக்கான நடைபயணத்தைத் தொடங்கிய அன்புமணி
விவகாரம் எக்கச்சக்க புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாசின் எதிர்ப்பையும்
மீறி அவரது பிறந்த நாளில் “உரிமை மீட்க, தலைமுறை காக்க” நடைபயணத்தை தொடங்கியிருப்பதால்,
சிக்கல் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று காவல் துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.
இன்று திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு
நடைபயணத்தை தொடங்கினார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’
என்ற தலைப்பில் இன்று தொடங்கி நவம்பர் 1ம் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல்கிறார்.
இந்த நடைபயணத்துக்கு தடை என்று ஒரு செய்தி பரவியது.
ராமதாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்முறை நிகழ்வதற்கு வாய்ப்பு
இருப்பதாக காவல் துறை தடை விதித்ததாக சொல்லப்பட்டது. ஆனால், காவல் துறை தடை விதிக்கவில்லை
என்று அன்புமணி ஆதரவாளர்கள் தெரிவித்து இன்று நடைபயணத்தைத் தொடங்கிவிட்டார்கள்.
பயணம் மேற்கொள்ளும் பகுதியில் அந்தந்த காவல் ஆணையர், எஸ்.பி-க்கள்
மனுக்களை பெற்று பரிசீலனை செய்து அனுமதி கொடுக்குமாறு டிஜிபி சுற்றறிக்கை கொடுத்துள்ளதாக
மட்டுமே காவல் துறை கூறியிருக்கிறது. பா.ம.க. நிறுவனரின் அனுமதி இல்லாமல் நடைபயணம்
மேற்கொள்ளக்கூடாது என ராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள மனு இன்னமும் பரிசீலனையில்
இருக்கிறதாம்.
அன்புமணி நடைபயணம் வெற்றி அடையக்கூடாது என்பதற்காக கட்சிக்குள் சில தள்ளுமுள்ளு நடப்பதற்கு வாய்ப்பு
உண்டு என்பதால் காவல் துறை எச்சரிக்கையாக கண்காணிக்கிறார்கள். அதேபோன்று விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியினர் ஏதேனும் வம்பிழுக்க வாய்ப்பு உண்டு என்று பாமகவினர் ஆயத்தமாக
இருக்கிறார்கள்.
சிக்கல் இல்லாமல் நடந்து முடியட்டும்.