Share via:
எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அன்புமணி பயணம் செய்கிறார். அதேபோல்
பிரேமலதாவும் பயணத்தைத் தொடங்குகிறார். இதையடுத்து விஜய் போட்டிருந்த சுற்றுப்பயணம்
கேன்சல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வேறு என்ன செய்யலாம் என்ற ஆலோசனை தீவிரம்
அடைந்துள்ளது.
நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் மேலாண்மை
அலுவலகத்தில் மாநாடு பணிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயலி உள்ளிட்டவற்றை
நேற்று ஆய்வு செய்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்,
அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை
பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, துணைப் பொதுச்செயலாளர்
சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் கூட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்று
உள்ளது. தவெகவின் இரண்டாவது
மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் என்னென்ன பணிகள்
நடைபெற்று வருகின்றன என்பதை ஆய்வு செய்துள்ளார். அத்துடன் மாநாட்டிற்கு என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும்
என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார். அதேசமயம் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியின் செயல்பாடுகள்,
அதில் இணைக்கப்பட்டுள்ள தகவல்கள், அதன் மூலம் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் உள்ளிட்டவற்றை
விளக்கி உள்ளார் விஜய்.
மேலும், தவெக மக்கள் விரும்பும் ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என
வீடு வீடாக சென்று பிரசாரத்தை நிர்வாகிகள் தொடங்கியுள்ள நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள்
மற்றும் கிளை கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்னைகளை கேட்பதற்கும் விஜய்
உத்தரவு போட்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம், நடைபயணம் என்ற திட்டங்களை மட்டும்
நிறுத்தி வைத்திருக்கிறாராம்.
இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைய வாழ்த்து
தெரிவித்திருப்பது அவரது ஆதரவாளர்களையே அதிர வைத்திருக்கிறது. இந்த மாதமே அரசியலில்
முழுமையாக இறங்கிவிடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போயிருக்கிறார்கள்.