Share via:
ஜெயலலிதாவின் மகள் என்று அவ்வப்போது சிலர் மீடியாவுக்குத் தலை
காட்டி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, காணாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் இப்போது
கேரளத்தில் இருந்து வந்திருக்கிறார் சுனிதா. இவர் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும்
பிறந்தவர் என்று உச்சநீதிமன்றம் வரையில் போயிருப்பதால், இந்த விவகாரம் செம ஹாட்டாக
போய்க்கொண்டிருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுனிதா, தன்னை ஜெயலலிக்தாவின்
மகள் என்று சொந்தம் கொண்டாடுகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா 1980களில் திருமணம்
செய்து கொண்டதாகவும், அதனால் தான் பிறந்ததாகவும் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக தனக்கு
18 வயதான பிறகு டி.என்.ஏ. சோதனை எடுக்கப்பட்டு இதை உறுதி செய்திருப்பதாகவும் கூறுகிறார்.
அதோடு, கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் போயஸ் கார்டனில்
உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது அவர் மயங்கிய
நிலையில் இருந்ததாகவும், சசிகலா அவரை கொடுமைப்படுத்தியதை கண்ணால் கண்டதாகவும் கூறியிருக்கிறார்.
சுனிதா தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு கடிதம் எழுதியிருக்கும்
சுனிதா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ’மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்
மரணத்திற்கு நீதி கேட்டு பிரதமரை சந்திக்கவுள்ளேன். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடவடிக்கை
எடுக்க வேண்டும். தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று
கோரிக்கை வைத்திருக்கிறார். அதோடு ஜெயலலிதாவின் சொத்துகளில் தனது பங்கிற்கான உரிமையை
வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். முக்கியமாக,
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தான் பெற்றோர் என நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க
வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இவரது மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ’’இது கடுமையான மரபுரிமை விவகாரம்,
அதை சுமாராக தள்ளுபடி செய்ய முடியாது. ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விசாரணை
மேற்கொள்வோம்” என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக்கொண்ட ஜெ.தீபாவையே அவர் கண்டுகொண்டதில்லை. அவ்வப்போது சிலர் இப்படி வருவது எப்படி..? இத்தனை நாட்களாக இவர் எங்கே இருந்தார், என்ன செய்தார் என்பதெல்லாம் ஆச்சர்யமே