News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் வருகைக்குப் பிறகு நாம் தமிழர் சீமான் பேச்சுக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை. அவர் எங்கு பேசினாலும் பெரிய அளவுக்கு வைரல் ஆவதும் இல்லை. இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் போராட்டக் குணத்தையே மறந்துவிட்டார்கள், கம்யூனிஸ்ட் கட்சி செத்துப்போச்சு என்று விமர்சனம் வைத்திருந்தார் சீமான். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான பதிலடி கொடுக்கிறாகள்.

இது குறித்து பேசும் கம்யூனிஸ்ட் கட்சியினர், ‘’கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை..! சீமானே சுயநினைவை இழந்து இத்தனை நாள் எங்கே கிடந்தீர்கள்? வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கியது. உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து பேசி மறுநாள் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக தற்கொலைக்கு காரணமான ரிதன்யாவின் மாமியார் சித்ராவை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ரிதன்யாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.என வலியுறுத்தப்பட்டது. அதன் பிறகு சித்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 20 நாள் கழித்து தெளிந்த சீமான்.. வழக்கம்போல வாடகை வாயால் வடைசுட ஆரம்பித்து விட்டார். மாதர் சங்கம் எங்கே போனது? நினைவை இழந்து திடீரென வந்து மைக் முன் நின்றால் நடந்தது எதுவும் தெரியாது சீமானே.. கொஞ்சம் தெளிந்த உங்கள் தம்பிகளிடம் கேட்டு தெரிந்து பேசவும்.

எங்களுக்கு உங்கள் பேச்சை கேட்கிற போது எங்கள் மேல் நீங்கள் கொண்ட பயம் இன்னும் தீராமல் இருப்பது தெரிகிறது. அநாகரீகமாக பொதுவெளியில் பெண்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் புதிதல்ல.. அண்ணன் எவ்வழியோ தம்பிகளும் அவ்வழியே பின்பற்றுகிறார்கள். உங்களை போலவே எங்களுக்கும் திருப்பி பதில் சொல்லத் தெரியும். ஆனால் அரசியல் நாகரீகமும் பொது மரியாதையும் அறம் சார்ந்த விமர்சனங்கள் மட்டுமே பண்பின் அடையாளம் என இயங்கி வருகிறோம்.

நாவை அடக்கி பேசாவிட்டால் அடக்கும் வல்லமை மாதர் சங்கத்திற்கு இருக்கிறது. தமிழகத்தில் எங்கு பெண்களுக்கு அநீதி நடந்தாலும் உங்களைப் போன்றவர்கள் கேட்கிற கேள்வி மாதர் சங்கம் எங்கே போனது? ஆண்ட கட்சிகள் பல இருக்கிறது. நாளை நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிற கட்சிகள் இருக்கிறது. ஆளும் கட்சி இருக்கிறது அதையெல்லாம் தாண்டி பெண்கள் பிரச்சனை என்றால் போராட்ட களத்தில் இருக்கும் ஒரே அமைப்பு மாதர் சங்கம் தான் என்கிறதை தொடர்ச்சியாக சொல்லி எங்களை வலிமையாக்கி கொண்டிருக்கிறீர்கள். அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது எங்கள் உயிரில் கலந்தது. உங்களைப் போல நாள் ஒரு பேச்சும் பொழுது ஒரு கொள்கையும் என நெறிகெட்டவர்களுக்கு தமிழக பெண்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்..’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link