Share via:
ஏசி இல்லாமல் காமராஜர் தூங்கமாட்டார், காமராஜர் ஒரு செயின் ஸ்மோக்கர்
என்றெல்ல்லாம் திமுகவினர் திட்டமிட்டு பரபரப்பைக் கிளப்பிவருகிறார்கள். இதையடுத்து
திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தைத்
தொடங்கியிருக்கிறார்கள். இது, தேர்தல் கூட்டணியை உடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற
கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’ஏசின்னு சொல்லி காமராஜரை
அசிங்கப்படுத்தறானுங்க ஓசின்னு சொல்லி மக்களை அசிங்கப்படுத்துறானுங்ககாமராசர் ஏசி இல்லாமல்
தூங்க மாட்டார் என்றவர்கள் இன்று காமராசர் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் செயின்
ஸ்மோக்கர் என்று சொல்கிறார்கள். இந்த பிரச்னையைத் தொடங்கிவைத்த திருச்சி சிவா மன்னிப்பு
கேட்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு ஏசி வைத்து தூங்கியவர் யார் என்று எங்களுக்கும்
சொல்லத் தெரியும்’’ என்று கொதிக்கிறார்கள்.
“காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி
வந்துவிடும் என்பதால் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியைச் செய்து
கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கருணாநிதி” என்று பேசிய தி.மு.க எம்.பி திருச்சி
சிவா அடுத்தபடியாக, ‘’தனது இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம்
காமராஜர் கேட்டுக் கொண்டார்’’ என்று கூறியதே கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் போராடும்
நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘’கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின்
எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று போற்றியவர்
தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த
வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல
நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி
வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில்
வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய
பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது
சரியல்ல..’’ என்று நழுவியிருக்கிறார்.
இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி போராடுமா அல்லது ஓட்டு பிச்சைக்காக
அமைதி காக்குமா..?