Share via:
இப்போது எங்கு மீட்டிங் நடந்தாலும் அங்கு தலைவர்கள் பேசும் நேரத்தில்
காலி சேர் இருக்கிறதா, யாராவது வெளியே போகிறார்களா என்றெல்லாம் படம் எடுத்துப் போடுவதில்
மீடியாக்கள் கவனம் செலுத்துகின்றன. அதை பார்த்து கடுப்பான வைகோ மீது கடுமையான விமர்சனங்கள்
வந்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக கூட்டத்தில்,
அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோபேசிக்கொண்டிருக்கும்போதே, கூட்டத்தில் இருந்த
தொண்டர்கள் வெளியேறியதைப் படம்பிடித்திருக்கிறார்கள். அதைக் கண்டு கோபமான வைகோ ஊடகவியலாளர்கள்
மீது தாக்குதல் நடத்தும்படியும், அவர்கள் கேமராக்களைப் பறிமுதல் செய்யும்படியும் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, அங்கிருந்த மதிமுக தொண்டர்கள், ஊடகவியலாளர்கள் மீது
கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனால், பல ஊடக நண்பர்களுக்கு கடுமையான காயங்கள்
ஏற்பட்டிருக்கின்றன. ஒரு மூத்த அரசியல் தலைவரான வைகோ சிறிதும் பொறுப்பற்ற முறையில்,
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூறியிருப்பதும், ஊடகவியலாளர்கள் மதிமுக கட்சித்
தொண்டர்களால் தாக்கப்பட்டதையும் பல தலைவர்களும் கண்டிப்பு காட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து பேசுபவர்கள், ‘’வைகோவின் பேச்சை கேட்க ஒரு மண்டபம்
நிறையும் அளவுக்கு கூட கூட்டம் வரவில்லை என்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் அதை படம் பிடித்த
செய்தியாளர்களின் கேமராவை பிடுங்கி துரத்தி அடிக்க மேடையிலேயே வைகோ உத்தரவிட்டதும்,
மதிமுக அடிபொடிகள் செய்தியாளர்களை கடுமையாக தாக்கி, கேமராக்களை சேதப்படுத்தியது மிகவும்
கண்டனத்திற்கு உரியது.
“உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்” என்று கத்தியிருக்கிறார்.
வைகோ காலி சேர்களை வீடியோ எடுத்ததுக்கா இவளோ
கோபம்? பாவம் ரெண்டு சீட்டுக்கு இதெல்லாம் ரொம்பவும் ஓவர்’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.
வயதான காலத்தில் கட்சியை மகனிடம் கொடுத்த பிறகு எதுக்கு இந்த பேச்சு.
ஓய்வுக்குப் போங்கோ என்றே அத்தனை பேரும் பரிதாபப்படுகிறார்கள்.