Share via:
திருப்புவனம் அஜித்குமார் மரணம் தமிழகம் முழுக்கவே கடும் அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆஜராகி நிதியுதவியும்
தம்பியின் வேலைக்கு உத்தரவாதமும் அளித்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி
அலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். இந்நிலையில் நடிகர் விஜய் ரகசியமாக நேரில் ஆஜராகியிருப்பது
பெரும் அரசியல் சலசப்பை உருவக்கியிருக்கிறது.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு
சென்று அவரது தாயரின் கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் அஜித்தின் குடும்பத்தினருக்கு
2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார்.
அதோடு விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை
வைத்திருக்கிறார். அதேநேரம், நீதிமன்றத்தில் அஜித்குமாருக்கு நீதி வேண்டும் என்றும்
1 கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஜய் வருவது எங்களுக்கு தெரியாது என்று அவரது கட்சியினர் பெருமையாகப்
பேசுகிறார்கள். அதேநேரம், விஜய் வரும் நேரத்தில் எப்படி 20க்கும் மேற்பட்ட கேமராக்கள்
தயாராக இருந்தது, விஜய் வருவதாகச் சொல்லியிருக்கிறார் என்று அஜித்குமாரின் தம்பி கூறியிருக்கிறார்.
தேர்தல் வருவதையொட்டி முதன்முதலாக விஜய் விசிட் அடித்திருப்பதால்
தேர்தல் ஸ்டண்ட் என்கிறார்கள். எனவே, ரகசிய விசிட்டை இப்படி பப்ளிக்காக செய்திருக்கிறார்.
எப்படியோ விஜய் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்.