News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எதிர்க்கட்சித் தலைவராக இப்போது திமுகவை எதிர்த்து கடுமையாக போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் அமித்ஷா கொடுத்திருக்கும் பேட்டி எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலாக மாறியிருக்கிறது. தொடர்ந்து கூட்டணி நிலைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, ‘’நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார், அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், “அண்ணா பெயரை அடமானம் வைத்துவிட்டது” என்கிறார். அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? “அண்ணா- இதய மன்னா” என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுக-வை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம்

ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய, கல்விக்கான நிதியை மறுப்பது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் முடிவு என்று சொல்கிறார் அமித்ஷா. மராட்டிய மாநிலத்தில் பாஜக அரசு மும்மொழி திணிப்பை செய்து, எதிர்ப்பின் சூடு தாங்காமல் கைவிட்டதே, அது என்ன ஒப்பந்தம்? ஒரு கண்ணுக்கு மட்டும் ஏன் சுண்ணாம்பு?

மு.க.ஸ்டாலின் எல்லாம் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்! திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்! இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!’ என்று பரபரப்பாக அறிக்கை விட்டார்.

இந்நிலையில் இன்று அமித்ஷா தமிழக பத்திரிகைகளுக்குப் பிரத்யேகப் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ‘’வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், ’’தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல் அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்றும் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்; கூட்டணி ஆட்சி என்று பேசும் எடப்பாடி பழனிசாமியை மதிக்காமல் தொடர்ந்து பேசிவருகிறார் அமித்ஷா. இதையடுத்து கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் இரண்டு கட்சியினருக்கும் எழுந்துள்ளது. அதேநேரம், ‘எடப்பாடி பழனிசாமியை கழட்டிவிட்டு விஜய்யுடன் கூட்டணி சேர்வதற்கு அமித்ஷா திட்டமிடுகிறார்’’ என்கிறார்கள்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link