Share via:
அரசியலுக்குள் நுழையவே செய்யாத நடிகை
மீனாவுக்கு விரைவில் பாஜகவில் மிகப்பெரும் பதவி கொடுக்க இருப்பதாக வரும் தகவல்களால்
நடிகை குஷ்பு கடும் கோபத்தில் இருப்பதாக கட்சிக்குள் களேபரம் நடக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேட்டி அணிந்தபடி
பங்கேற்ற பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில்
அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகை மீனா கலந்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை
உருவாக்கியது. அடுத்து அமைச்சர் முருகனுடன் சில நிகழ்ச்சிகளில் மீனா பங்கேற்றார்.
இந்நிலையில் நடிகை மீனாவுடன் குடியரசு துணைத்தலைவர்
ஜெகதீப் தங்கர் சந்திப்பு நடந்து புகைப்படம் வெளியானது. கங்கனா ரணாவத் பாணியில் ஒரு
புதிய முகத்தை தமிழ்நாட்டில் பாஜக உருவாக்கி வருகிறது என்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல் கட்டமாக மீனாவுக்கு தமிழக பாஜகவில்
பொறுப்பு வழங்கப்படுமா என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ’’தமிழக்த்தில் மாநில அளவிலான நிர்வாகிகள், அணி நிர்வாகிகளை நியமிக்கும்
பணிகள் நடைபெற்று வந்தன. யார் வந்தாலும் வரவேற்போம்.
பாஜகவில் நிறைய பேர் தற்போது இணைந்து வருகிறார்கள்.
அப்படி வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால், ஸ்டாலினுக்கு
ஆட்சி முடியப் போகிறது.. அடுத்த ஆண்டில் தேர்தல் நடக்க போகிறது.. அடுத்த தேர்தலில்
எந்த கட்சி வெற்றி பெறப் போகிறதோ.. அந்த கட்சியின் பக்கம் எல்லாரும் வந்துகொண்டு இருப்பார்கள்..
அதனால் நாங்க யார் வந்தாலும் வரவேற்போம்.. நீங்க எப்படியாவது கூட்டணியை உடைத்துவிடலாம்
என்று நினைக்கிறீங்க.. ஆனால் அதுமட்டும் நடக்கவே நடக்காது.’’ என்று கூறினார்.
இதையடுத்து மீனா வருவதும் அவருக்குப் பதவி கிடைப்பதும்
உறுதியாகியுள்ளது. இத்தனை ஆண்டுகளும் கட்சிக்கு உழைத்த தனக்கு பதவி இல்லையா என்று கொந்தளித்துவருகிறார்
குஷ்பு.