News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று 60 ஆவது திருமண நாள் காணும் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ்க்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறர்கள். இன்றைய தினம் அன்புமணி சரண்டர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாக்டர் ராமதாஸும் அன்புமணியும் ஆளுக்கு ஒரு பக்கம் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்கள். இதனால் கட்சி இரண்டாக உடைவது உறுதியாகிறது. இந்நிலையில் அன்புமணி இன்று ராமதாஸின் திருமண நாளில் சந்தித்து சரண்டர் ஆகவேண்டும் என்பதே பாட்டாளிகள் ஆர்வமாக இருக்கிறது.

இது குறித்து பா.ம.க.வினருக்கு ஒரு சர்குலர் போயிருக்கிறதாம். அதில், ‘’கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் கூட சமூக வலைத்தளங்களில் பாமக மீது மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இவர்களெல்லாம் பாமகவினரும் அல்ல, பாமக மீது அக்கறைக் கொண்டவர்களும் அல்ல. எதிரிகளின் கைக்கூலிகள்! அவர்களுக்கெல்லாம் பதில் அளித்து நேரத்தை வீணாக்காதீர்கள்!

சமூக வலைத்தளங்கள் இப்பொழுது மனநோயாளிகளின் கூடாரமாகவும், வேலையற்ற, பண்பற்றவர்களின் இருப்பிடமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். பாமக இயக்கத்தை எவரும் பலவீனப்படுத்த முடியாது! அன்புமணி இல்லாமல் கட்சி இல்லை. ராமதாஸ் இல்லாமலும் கட்சி இல்லை. ஆகவே, இருவரும் விரைவில் இணைந்து செயல்படுவார்கள். அதுவரை அமைதி காக்க வேண்டும். யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது’’ என்று சர்குலர் விடுக்கப்பட்டுள்ளது.

இது அன்புமணியின் குள்ளநரித்தனம் என்று டாக்டர் ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள். நல்லபடியாக விழா முடியட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link