Share via:
விபூதியை அழித்துவிட்டு செல்ஃபி போஸ் கொடுத்த திருமாவளவன் மீது
பாஜகவினர் பாயந்துவருகிறார்கள். அதற்கு திருமாவளவன் விதவிதமாக விளக்கம் கொடுத்தாலும்
அது எடுபடவில்லை. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமியக் கட்சியாக மாறிவிட்டது
என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அர்ஜூன் சம்பத் இன்று, ‘’திருமாவளவன் விடுதலை சிறுத்தை
கட்சியை தொடங்கிய போது அதில் இஸ்லாமியர்களே கிடையாது. அதுவரை இந்து எதிர்ப்பு கொள்கை
அந்த கட்சியில் இருந்தது இல்லை. ஆனால் நாளடைவில் அக்கட்சியில் இஸ்லாமியர்கள் சிகவில்
நுழைந்தார்களோ அன்று உதயமானது தான் இந்த இந்து எதிர்ப்பு கொள்கை. இந்த கட்சியில் தற்போது
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களாகவே உள்ளனர். இதற்கான காரணம் கட்சி
சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பண உதவி செய்கிரார்கல்.
கட்சி நிகழ்ச்சிகளுக்குப் பண உதவி வழங்குவதாகவும் அதற்குப் பதிலாக
கட்சிப் பொறுப்புகளில் இஸ்லாமியர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.
அதை திருமா ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாக இக்கட்சியில் இஸ்லாமியர்கள் சிறிதுசிறிதாக
தங்களை வலுப்படுத்தி கட்சியை நிர்வகிக்கும் முழு பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தனர்….! தங்களின் திட்டங்களையும் இந்துமத வெறுப்பு பிரச்சாரத்தையும் திருமாவளவன்
வாயிலாகவே பேசவைத்தனர்….!!
இன்று திருமாவளவன் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாத
அளவுக்கு கட்சியை இஸ்லாமியர்கள் தன்வசப்படுத்தி விட்டார்கள்…!! விசிகவில் இன்று இந்துக்களும்
கிறிஸ்தவர்களும் அனாதை ஆக்கப்பட்டுவிட்டனர்..!! சில ஆண்டுகளாகவே இஸ்லாமிய கட்சிகள்
தங்கள் மதத்துக்காக பல போராட்டங்களை நடத்தியது எந்த சம்மந்தமும் இல்லாத விடுதலை சிறுத்தைகள்
கட்சியும் இதில் இணைத்து போராட்டம் நடத்தியது இதற்கு அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமிய
பொறுப்பார்களே காரணமாக இருந்தனர்….!!
தலித் சமூதாய மக்களுக்காக தொடங்கப்பட்ட அந்த கட்சி இப்போது இஸ்லாமிய
கட்சியாகவே செயல்படுவது தலித் சமூக மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது.
தலித் என்ற போர்வையில் இஸ்லாமிய அடிப்படைவாத இயங்கங்களான PFI – SDPI இயக்கத்தின் ஊதுகோலாக
திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் என்ன பதில் கொடுப்பார்கள் என்று பார்க்கலாம்.