News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அதிகாலையில் எழும்பி பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வேன் மீது ரயில் மோதிய சம்பவம் தமிழகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்மேலும் பலர் காயமடைந்து கடலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியிருக்கிறது. முதலில் ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து என்று கூறப்பட்டது.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்தனர் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அறிந்து காயமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.

இப்போது ரயில் கேட்டை மூட முயற்சித்த நேரம் வேன் டிரைவர் வம்படியாக நுழைவதற்கு முயற்சி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறு காரணமாகவே வேன் உள்ளே நுழைந்து விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்துக்குக் காரணம் என்று ரயில்வே கேட் ஊழியர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணை நடந்துவருகிறது.

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதோடு, கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியபோது ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை என்பவர் மீது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை எடுத்துள்ளது.

இதனை பள்ளிக்கல்வித் துறை உடனடியாக விசாரித்து போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இனியொரு அலட்சியம் வேண்டாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link