News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஸ்டாலின் அவ்வப்போது நடைபயணம் செய்யும்போது ஒருசில நபர்களை சந்தித்துப் பேசுவது உண்டு. அந்த நேரத்தில் ஸ்டாலினை வேறு யாரும் நெருங்கிவிடக் கூடாது என்று சூட்டிங் நடத்துவது போன்று மக்களைத் தடுத்து நிறுத்தி வைப்பார்கள்.

இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலையில் வாக்கிங் சென்றார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் ஒரு அம்சமாகவே இந்த வாக்கிங் பயணம் திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிஜமான மக்களுடன் அந்நியோன்யமாகப் பேசினார் எடப்பாடி. அப்போது, அதிமுக ஆட்சியில் கிராமங்கள் கூட சிறப்பாக சாலைவசதி செய்யப்பட்டதை பற்றி சிறப்பாக பேசுவதும் மட்டுமல்ல உரிமையாக கோரிக்கை வைத்தார்கள்.

அதாவது, ‘அண்ணா நீங்க அடுத்து ஆட்சிக்கு வரும்போது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே சொத்துவரி ஏற்றுங்க, வருஷம் வருஷம் ஏற்றாதீங்க’’ என கோரிக்கை வைத்தார்கள். அவற்றை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அடுத்து நடைப்பாதை கீரை விற்பவர்களிடம் எலும்பிச்சை பழம் விற்பவர்களிடம் இயல்பாக எடப்பாடியார் பேசி பழங்களை விலைக்கு வாங்கினார்.

இபிஎஸ் செயற்கைதன்மை இல்லாமல் திமுக கட்சி போல் ஐந்து தேர்தல் யுக்தி நிறுவனங்கள் வைத்து ஆள் செட் அப் செய்து செயற்கையாக ஸ்டாலினை மக்களுடன் பழகவைத்து போட்டோ ஷூட்டிங் போல் இல்லாமல் மக்களுடன் ஒருவராக இயல்பாக எடப்பாடியார் பேசுவது இயல்பாக இருந்தது. இதுவே சிறப்பான தேர்தல் யுக்தி.

எடப்பாடியாரை மக்களுடன் அதிக நேரம் செலவிடவிடுங்கள்,போகும் இடமெல்லாம் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் தொழில்துறையுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து அவர்கள் கோரிக்கையை கேட்கவிட்டாலே மக்கள் இந்த ஆட்சி மீது மனக்குமுறலை கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அதே போல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு மக்கள் தன் வரும் 2026 அதிமுக ஆட்சியில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என புரிந்து விடும். இந்த உற்சாகத்துடன் சென்றால் அதிமுக கட்சி ஆட்சி அமைப்பதும் வெற்றி பெறுவதும் உறுதி என்கிறார்கள்.

திமுகவினரை நேற்றைய பயணம் அசைத்துப்போட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link