Share via:
தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில் சத்தியம்
தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சர்வே தமிழகத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
ஆளும் திமுகவுக்கு கடுமையான போட்டியாக அதிமுக இருக்கிறது என்பது திமுகவினரை அதிர வைக்கிறது.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு
அதிகம் உள்ளது, யார் மீண்டும் முதலமைச்சராக வர மக்கள் விருப்பம் தெரிவிக்கிறார்கள்,
எந்த கட்சி ஆட்சியமைக்கும், யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்றெல்லாம் கணிப்பு
வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியகள் ஆசிரியர்களின் வாக்குகள் யாருக்கு விழும் என்பது
குறித்து கேள்வி எழுப்பப்பட்டதில் 20 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும் அதிமுகவுக்கு
15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட
58 சதவீதம் பேர் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக யார் வரவேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்
என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மு.க ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்று 39 சதவீதம்
மக்கள் வாக்களித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என்று 36 சதவீதம்
பேர் வாக்களித்துள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று
13% பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சீமானுக்கு 7 சதவீதம் பேரின் ஆதரவு இருக்கிறது.
மற்றவர்களின் பெயர்களை 5% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள 61 தொகுதிகளில் திமுகவிற்கு 18 தொகுதிகளிலும்,
அதிமுகவிற்கு 38 தொகுதிகளிலும், ஐந்து தொகுதிகள் இழுபறியாகவும் செல்ல வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மண்டலத்தில் உள்ள 46 தொகுதிகளில் திமுகவிற்கு 31 தொகுதிகளும்,
அதிமுகவிற்கு 8 தொகுதிகளும், இழுபறியாக 7 தொகுதிகளும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மொத்தமாக திமுக கூட்டணிக்கு 105 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு
90 இடங்களும் இழுபறியாக 39 இடங்களும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த
39 தொகுதிகள் யார் பக்கம் செல்கிறதோ அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்வே எடப்பாடி ஆட்களுக்கு செம குஷியாக மாறியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னமும்
8 மாதங்கள் இருப்பதால் அதற்குள் இந்த வித்தியாசத்தைக் குறைத்துவிட முடியும் என்று நம்பிக்கை
சொல்கிறார்கள்.
இந்த கருத்துக்கணிப்பில் நடிகர் விஜய் கட்சிக்கும் சீமானுக்கும்
ஒரு இடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.