Share via:
ஒருவழியாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துவிட்டாலும் இன்னமும் தெளிவு
கிடைக்கவே இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைத்த ”கூட்டணி ஆட்சி” என்ற
கருத்து மீண்டும் மீண்டும் அதிமுக தரப்பை கோபப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு அதிரடியாகப் பேசியிருக்கிறார் எடப்பாடி
பழனிசாமி.
எடப்பாட் பழனிசாமி பேசுகையில், ‘’பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது
கிடையாது. அந்த அளவிற்கு ஏமாளிகள் நாங்கள் இல்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில்
அமர்வோம்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இதற்கு பதில் கூற முடியாமல்
பாஜகவினர் தடுமாறி நிற்கிறார்கள். ”கூட்டணி ஆட்சி” என்ற சர்ச்சை தொடர்ந்து பேசுபொருளாக
இருந்து வருவதால் இந்தக் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்பதே கேள்வியாக
உள்ளது.
அதேநேரம் பாஜக தமிழக தலைவர் ஆகஸ்ட் 3ம் தேதி எடப்பாடி பழனிசாமிக்கு
தன்னுடைய நெல்லை வீட்டில் விருந்து ஒன்றிற்குகு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்து
விழாவில் அறுசுவை உணவுகள் இடம்பெறும் பாஜக தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த விருந்தின்
மூலம் கூட்டணி பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக பாஜக தொடர்கள்
கருத்தாக உள்ளல்து.
ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியின் கூட்டணிக்கு வாய்ப்புகள் உள்ளன.
இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், மறுபுறம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்காக
கதவுகளை திறந்தே வைத்திருக்கிறார். திமுகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்
என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் கணக்காக இருக்கிறது.
விஜய் தன் கூட்டணிக்கு வந்தால் சிறுபான்மை மக்கள் ஆதரவுடன் ஆட்சி
அமைக்க முடியும் என்று எண்ணுகிறார். அதிமுக இல்லை என்றால் பாஜகவினால் ஒரு சீட் கூட
வெல்ல முடியாது. எனவே, இந்த கூட்டணி தொடரவேண்டும் என்பதே அதிமுகவினர் ஆர்வமாக இருக்கிறது.
விரைவில் தெளிவான பதில் கிடைக்கும் என்றே நம்புவோம்.