Share via:
சமீபத்தில் ராம்நாட் ஏரியாவைச் சேர்ந்த அன்வர் ராஜா அதிமுகவில்
இருந்து திமுகவில் இணைந்தார். இதற்கு பதிலடி தருவது போன்று முக்குலத்தோர் சமுதாயத்தின்
ஒரு அடையாளமான ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி பெருந்தமிழர் எடப்பாடியார்
முன்னிலையில் அதிமுகவில் இணைக்கப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் அதிமுகவுக்கு பூஸ்ட்
ஆக அமையுமா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.
ஏனென்றால், அரசியல் தெரிந்த அனைவருக்கும் அன்வர் ராஜா யார் என்று
தெரியும். ஏன் அதிமுகவில் இருக்கும் அனைவருக்கும் அன்வர் ராஜாவை தெரியும்.. ராமநாதபுரம்
தாண்டி யாருக்கும் இந்த இவன தெரியாது. ஏன் அதிமுககாரர்களுக்கே தெரியாது. இப்படியொரு
நபரை புதிதாக களத்தில் இறக்கி, வேட்பாளராக அறிவித்துவிடும் திட்டம் இருக்கிறதா என்பது
புரியாமல் லோக்கல் நிர்வாகிகள் பதறிப்போய் இருக்கிறார்கள்.
அதேநேரம் திமுகவினர், ‘’இராமநாதபுரத்து மன்னரின் வாரிசு தன் கட்சியில்
சேர்த்துவிட்டதாகப் புளகாங்கிதம் அடைந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி… தன் கட்சியின்
பெயரில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் வரலாறு தெரிந்திருந்தால் இப்படிப் பீற்றிக்கொண்டு
திரிய மாட்டார் எடப்பாடி பழனிசாமி… 1967 தேர்தலில் இராமநாதபுரம் மன்னரே வேட்பாளராக
இருந்தபோதும் அவருக்கு எதிராகச் சாதாரண தொண்டர் அய்யா தங்கப்பனை நிறுத்தி மன்னரைத்
தோற்கடித்த கட்சி தி.மு.க… அதைச் செய்த தலைவர் பேரறிஞர் அண்ணா… சாமானியர்களை ஆட்சி
அதிகாரத்திற்கு கொண்டுவந்த அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி
இன்று மன்னரின் வாரிசுகளைக் கட்சியில் சேர்த்துவிட்டோம் எனக் குதூகலிக்கிறார்கள்’’
என்று கிண்டல் செய்கிறார்கள்.
இளைய மன்னர் திருப்பம் தருவாரா அல்லது பஞ்சாயத்தைக் கூட்டுவாரா
என்பதைப் பார்த்துவிடலாம்.