Share via:
காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு
ஒரு கடிதம் அனுப்பியிருந்தார் பன்னீர்செல்வம். என்னை விமானநிலையத்தில் சந்திக்க அனுமதி
கொடுத்தால் அது ஒரு வரலாற்று சம்பவம் எனும் ரீதியில் மண்டியிட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.
ஆனால், அதனை மோடி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அதிமுகவும் எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே தேவை என்பதில் உறுதியாக
இருந்ததால், பன்னீரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் மோடி வந்து சென்ற பிறகு
பன்னீரின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு ஆலோசனை தெரிவித்திருந்தார்.
அதாவது, மதிப்பு கொடுக்கவில்லை என்றால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து பன்னீர் வெளியே
வர வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி இன்று முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சம்காரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு
தரவேண்டிய கல்வி நிதியை தராமல் இருப்பதற்கு மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்
கொள்கிறேன். மத்திய அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது எந்த வகையில் பிரயோஜனப்படாது
பன்னீர்.