Share via:
மக்களவையில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் எதிர்க்கட்சித்
தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு நேரடி சவால் விடும் வகையில் பேசினார். குறிப்பாக
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலையிடவில்லை என்று பிரதமர் மோடியால் சொல்ல
முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பான விவாதத்தை விரிவாக காண்போம்.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ” பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை
இந்தியா துல்லியமாக தாக்கிய இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஆதரவை எங்களது கூட்டணியுடன்
அமல்படுத்தினோம் என்றார். ஆனால், ராணுவ நடவடிக்கைக்கு முன்பே பாகிஸ்தான் அரசிடம் தகவல்
தெரிவிக்கப்பட்டது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் பல கேள்விகள்
எழுப்பப்பட வேண்டிய நிலை உருவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த வகையில் ராகுல் எழுப்பிய சில கேள்விகள் வைரலாகி வருகினான.
அதாவது ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன் பாகிஸ்தான் அரசிடம் தகவல் ஏன் தெரிவிக்கப்பட்டது?
இது எவ்வாறு தேசிய பாதுகாப்பு நலனுடன் ஒத்துபோகிறது? பாகிஸ்தான் மீது தாக்குதல் நடப்பதாக
அரசு சுயேட்சையாக எடுத்த முடிவா? ஏன் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை செய்யப்படவில்லை?
சீனாவை எதற்காக தவிர்க்கிறீர்கள்? ராணுவ நடவடிக்கைகளை செயல்படுத்துவதில்
தெளிவான உத்திகள் ஏன் இல்லை? ராணுவத்திற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகிறதா?
அரசியல்தான் அவர்களை கட்டுப்படுத்துகிறதா? என்றெல்லாம் பேசினார்.
“ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நான் தான் முடித்து வைத்தேன்”
என டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். அதை ஆளுங்கட்சி மறுப்பதாக இருந்தால் “டிரம்ப் சொல்வது
பொய்” என்று பிரதமரை ஒருமுறையாவது சொல்லச்சொல்லுங்கள் என கேட்டார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் 105 நிமிடம் பேசினார்.
இந்த பேச்சில் டிரம்ப் என்ற பெயரையே பிரதமர் மோடி சொல்லவில்லை. மக்களவையில் விவாதம்
முடிந்தது. மக்களுக்கு உண்மை விளங்கியது.
இம்புட்டுத்தான் உங்க வீரமா மோடி..?