Share via:
கூலி விழாவில் ரஜினி, அகரம் விழாவில் சூர்யா ஆகியோர் மறைமுகமாக
நடிகர் விஜய்யை தாக்குதல் கொடுத்த நிலையில், தன்னுடைய 33 ஆண்டு திரையுலக வாழ்வுக்கு
நன்றிக் கடிதம் எழுதியிருக்கும் அஜித் நேரடியாகவே விஜய்யை சீண்டியிருக்கிறார்.
அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’உங்களது அன்பை என் சுயலாபத்திற்காகவோ
அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது, விஜய்யை
வம்புக்கு இழுக்கும் வேலை. அவர் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே
கிண்டல் செய்கிறார் என்று அவர்ரது ரசிகர்கள் பாய்ந்து பாய்ந்து குதறுகிறார்கள்.
இது குறித்து விஜய் ரசிகர்கள், ‘’அதாவது ’’என் படத்துக்கு ஆதரவு குடுங்க, என் கார் ரேஸ்க்கு ஆதரவு
குடுங்க, அப்புறம் உங்க வேலையை பாத்துட்டு போங்க என்பதையே என் சுயலாபத்துக்காக
உங்களை நான் யூஸ் பண்ண மாட்டேன்’’ என்று சொல்கிறார். ரசிகர்
மூலம் கோடி கணக்குல சம்பாதிச்சுட்டு. இப்போ வந்து ரசிகர்களை சுயநலத்துக்காக பயன்படுத்த
மாட்டேன்னு அறிக்கை விடுவது அவரது இயலாமை. சமுதாயத்துல நடக்குற மக்கள் பிரச்சினைக்கு
என்ன செய்தார்..?
இங்க யாரும் சுயநலத்திற்காக ரசிகர்களைப் பயன்படுத்தல, தளபதி விஜய்
அவர் ஆரம்பித்த மன்றத்தின் மூலம் ரசிகர்களின் துனையோடு பல உதவிகள் நடத்தினார். இதே
போல் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் ராகவா லாரன்ஸ் அவர்களும் பல உதவிகள் ரசிகர்கள்
மூலமாக உதவி செய்ராங்க.
இங்கு யாரும் தங்கள் ரசிகர்களை சுயநலத்துக்காகப் பயன்படுத்துவதில்லை.
விஜயகாந்த், விஜய் (விஜய் மக்கள் இயக்கம் முதல் தவெக வரை), சூர்யா (அகரம்), விக்ரம்,
லாரன்ஸ் ஆகியோர் தங்கள் ரசிகர்கள் மூலம் பல நலத்திட்டங்களைச் செய்துள்ளனர். ஆனால்,
ரஜினியும் அஜித்தும் தமிழக மக்களுக்கு என்ன செய்தார்கள்?? “நான் தனியாக வந்தவன்,
ஏழை மெக்கானிக்” போன்ற பலவேறு கூற்றுகளைத் தொடர்ந்து இன்று இதுவும்.மக்கள் நலத்தில்
ஈடுபடுவோரையும், உண்மையாய் செயல்படுவோரையும் விமர்சிக்கிற நோக்கத்துடன் செயல்படும்
சுயநலமிக்க அஜித்தைப் போன்றரை தமிழக மக்கள் இனிமேல் புறக்கணிக்க வேண்டும்’’ என்று வறுத்தெடுக்கிறார்கள்.