News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இன்று மதுரைக்கு வரும் அமித்ஷா முன்னிலயில் பா.ம.க. கூட்டணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாமக மோதல் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் ராமதாஸ் மிரட்டப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அமித்ஷா இன்று இரவு மதுரைக்கு வருகிறார். காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார்.பின்னர் கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து மூன்று மணியளவில் வேலம்மாள் திடலில் மாநில (தமிழ்நாடு), மண்டல, மாவட்ட தலைவர்கள், பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இன்றைய தினம் அன்புமணியின் சந்திப்பு கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசும் பா.ம.க.வினர், ‘’நேற்றைய தினம் ராமதாஸ் பேட்டி கொடுப்பதாக அறிவித்து இருந்தார். அது நிறுத்தப்பட்டது. அதேபோல், அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் படலத்தை ராமதாஸ் திடீரென நிறுத்தி உள்ளார். இவற்றை வைத்து பார்க்கும்போது டெல்லியின் அழுத்தம் ராமதாஸை பாதித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

அன்புமணியின் தூதராகவே ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை சந்தித்தனர். சுமார் 3 மணி நேரம் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.  அதன் பிறகே ராமதாஸ் அமைதியாகிவிட்டார். அவர் எடுக்க நினைத்த முடிவுகளை எடுக்க முடியாமல் ராமதாஸ் திணறி வருகிறார்.

நேற்று முன்னாள் பாமக தலைவர் பேராசிரியர் தீரன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பத்திரிகையாளர்கள் சந்திப்பு, அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பாஜவின் டெல்லி தலைவர்கள் அழுத்தமே காரணம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதேநேரம் அன்புமணியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அன்புமணி, ‘’உங்களுக்குள்ள எல்லாம் இந்த குரூப், அந்த குரூப் என்றெல்லாம் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரே ஒரு நபர்தான். யாரு… அன்பழகன்தான்… (தலைமை நிலைய செயலாளர்). மாவட்ட செயலாளர் ரூ.5 லட்சம் என்று வித்தாரு, அப்புறம் ரூ.3 லட்சத்துக்கு வந்துச்சு, பின்னர் 2 லட்சம், இன்று 1 லட்சம் என இப்படியெல்லாம் பேசி காசு சம்பாதிச்சுக் கிட்டு, கட்சியையும் இந்த சாதியையும் சமுதாயத்தையும் அழிச்சிக்கிட்டு இருக்கிறாரு.. கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி. ஐயாவோட (ராமதாஸ்) கால புடிச்சிட்டு கிடக்கிறான். வாத்தியார் இன்னொருத்தர் இருக்கிறார். எல்லோரும் அவரை பயன்படுத்தி வருகின்றனர். நான் அமைதியாக இருக்கிறேன்’ என்று பேசி இருக்கிறார். இந்த விவகாரம் கட்சியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஆனாலும் அமித்ஷா வந்து போகும் வரையில் டாக்டர் அமைதி காப்பார்’’ என்கிறார்கள்.

மாம்பழம் வரையிலும் அமித்ஷா கைக்கு வந்திடுச்சே. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link