Share via:
தமிழக தேர்தல் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இப்போது
திமுக, அதிமுக, விஜய் மற்றும் சீமான் என நான்குமுனைப் போட்டி உறுதியாகியுள்ளது. இன்றைய
நிலவரம் குறித்து திமுக எடுத்த சர்வே நிலவரம் கலவரம் என்கிறார்கள்.
திமுகவில் இருந்து மும்பையைச் சேர்ந்த மோரீஸ் நிறுவனத்தை அணுகி
சர்வே எடுக்கக் கேட்டுள்ளார்கள். அதன்படி மண்டலவாரியாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இந்த
ரிசல்ட் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி திமுக கூட்டணிக்கு 70 முதல் 85 தொகுதிகள் கிடைக்கும் என்று
சொல்லப்பட்டுள்ளது. அடுத்ததாக அதிமுகவுக்கு 60 முதல் 70 தொகுதிகள் கிடைக்கும் என்றும்
கூறப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 40 தொகுத்கள் வெற்றி வாய்ப்பு இருப்பதாகத்
தெரியவந்துள்ளது. இதுதவிர, 50 தொகுதிகளில் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அதேபோன்று அடுத்த முதல்வர் என்ற போட்டியில் முதல் இடத்தில் விஜய்
இருக்கிறார். அதாவது 27% பேர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஸ்டாலினுக்கு
20% மற்ரும் எடப்பாடி பழனிசாமிக்கு 23% ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களுக்கு அடுத்து சீமானும்
அதற்கு அடுத்து அண்ணாமலையும் வருகிறார்கள்.
இந்த சர்வே திமுக வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.
அதனாலே 30 சதவீத வாக்காளர்களைக் கொண்டுவர வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்கள் மீட்டிங்
போட்டு கட்சியை விரட்டுகிறாராம் ஸ்டாலின்.