Share via:
அன்புமணிக்கு வரும் வியாழன் அன்று பதில் சொல்ல இருப்பதாக டாக்டர்
ராமதாஸ் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான சண்டை
குறித்து ஏகப்பட்ட யூகங்கள் உலவுகின்றன. குறிப்பாக இத்தனை பிரச்னைகளுக்கும் சுசிலாவே
காரணம் என்று ஒரு பேச்சு வெளியாகியுள்ளது.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர், ‘’சுசீலா என்கிற பெண்மணி தான்
ராமதாஸ் அண்புமணி சண்டைக்கு காரணம். நர்ஸான சுசிலா ராமதாசுக்கு பணிவிடை செய்பவர். அவர்
குடும்பத்திற்குள் வரும்போது அன்புமணி ஏழுவயது சிறுவன். இந்த சுசிலாவின் பெயரை சொல்லி
ராமதாஸை பேசகூடாதவார்த்தைகளில் சௌமியா திட்டியுள்ளார். அந்த தகறாரில் ராமதாஸ் அண்புமணியால்
தாக்கப்பட்டார் என்கிறது பாமக வட்டாரங்கள் .பல லட்சம் கோடிகள் கொண்ட ராமதாஸ் குடும்பத்தில்
மாதம் 25 லட்சரூபாய் என சுசிலாவுக்கு வழங்கபட்ட பராமரிப்பு தொகை நிறுத்தப்பட்டது. காடுவெட்டி
குருவுக்கு செய்தது போல தனக்கும் செய்து விடுவார்கள் என ராமதாஸ் சுயமரியாதைக்காக போராடுகிறார்.
சௌமியா எகிறுவதற்கு பாஜக தான் காரணம்’’ என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசும் பொதுவான நிர்வாகிகள், ‘’பாட்டாளி மக்கள் கட்சியின்
பிரச்சினையை தகப்பனுக்கும் பிள்ளைக்கும் இடையேயான பிரச்சினையாக நான் புரிந்துகொள்ளவில்லை
இது இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சினை எப்படியோ சேர்த்துவிட்ட சொத்து தன் பிள்ளைகள்
அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்று பெரியவரும் தன் பிள்ளைகளுக்கு மட்டுமே அவை சேர
வேண்டும் என்று சின்னவரும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
1989-ல் பாமக என்ற கட்சியை தொடங்கிய போது, “எனது வாரிசுகள் கட்சியிலோ,
வன்னியர் சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்தால்
என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்” என்று சத்தியம் செய்த ராமதாஸ்,
இன்று சவுக்கடி பட்ட வேதனையில் இருக்கிறார். கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை நுழைய
விட்டதன் பலனை இன்று அனுபவிக்கிறார்’’ என்கிறார்கள்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாமக நேற்று
நடைபெற்ற பாமக மாவட்டப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பு.தா.அருள்மொழி, ’’வன்னியர்
சங்கமும், பாமகவும் தொய்வின்றி மக்கள் பணியாற்ற ஆயத்தமாகி விட்டன. கட்சி, சங்கத்தை
உருவாக்கியவரே ராமதாஸ்தான். அவர்தான் கட்சிக்குத் தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில்
எந்த சலசலப்பும் இல்லை. கட்சிக்கு அன்புமணி தலைவர் கிடையாது என்று ராமதாஸ் சொல்லிவிட்டார்.
பிறகு ஏன் நான்தான் தலைவர் என்று அன்புமணி சொல்லிக் கொள்கிறார்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜாதி மக்களிடையே சண்டையை மூட்டிவிட்டு குளிர் காய்ந்தவர்கள் இன்று
வீட்டு சண்டையில் வெந்துகொண்டிருக்கிறார்கள்.