Share via:
கருணாநிதியின் பிறந்தநாள் பரிசாக ஞானசேகரனின்
மொபைல் ஹிஸ்ட்ரி வெளியிட்டுள்ளார் முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இந்த விவகாரம்
தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவி விவகாரத்திற்காக அண்ணாமலை சாட்டையால்
அடித்துக்கொண்டார். தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரிடம் உள்ள ஆதாரங்களை வெளியிடுவதாக
அறிவித்திருந்தார். இப்போது தீர்ப்பு வந்துவிட்டது. திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு,
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
இந்நிலையில் இன்று அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில்
பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கூறியிருக்கிறார். சம்பவ தினத்தில் 8.52 –
ஃப்ளைட் மோட் ஆஃப் ஆகிறது. 8.55 – போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறான். அந்த அதிகாரி
அடுத்த சில நிமிடங்களில் அதாவது 9.01 மணிக்கு ஞானசேகரனுக்கு பேசுகிறார். இதை காவலர்கள்
விசாரணை செய்தார்களா..?
அடுத்த நாள் வழக்கத்துக்கு மாறாக கோட்டூர் சண்முகத்துடன் நான்கு
முறை பேசியிருக்கிறான். அதன் பிறகு அன்றைய தினம் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் விசாரணைக்குப்
பிறகு வெளியே விடப்படுகிறான். இந்த கோட்டூர் சண்முகம் அடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன்
பேசியிருக்கிறான். எனவே, கோட்டூர் சண்முகம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை
செய்யப்பட்டார்களா என்று தெரியவேண்டும்’’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது இத்தனை பெரிய குற்றம் நடந்த பிறகும் அண்ணா பல்கலையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக
முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிசாமி தகவல் தெரிவித்திருக்கிறார்.
அவரது பதிவில், ‘’அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல்
வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு குற்றவாளி ஞானசேகரன் தண்டனை பெற்றாலும், மாணவிகள் இன்னும்
பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்ந்தும் நிலவுகின்றன.
இதுகுறித்து Times of India ஆய்வு செய்த போது வருகையாளர்கள் சரியான சோதனை இல்லாமல்
உள்ளே செல்வதும், பாதைகள் மீது கொடிகள் வளர்ந்துள்ளதும், இருண்ட பகுதிகளில் கண்காணிப்பு
இல்லாதது போன்றவை தெரியவந்துள்ளது. சில இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மற்றும்
விளக்குகள் பொருத்தப்பட்டாலும், பாதுகாப்பு நடைமுறைகள் தளர்வாகவே உள்ளன. * இது எளிதாக
கடந்து செல்லக்கூடிய விவகாரம் அல்ல, மாணவர்கள் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகமும்,
தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.