News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அன்புமணிக்கு எதிராக ஓப்பனாக ராமதாஸ் கொடுத்த பேட்டி வன்னிய மக்களிடம் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அய்யாவை அசிங்கப்படுத்திய பாட்டில் மணியை சும்மா விட மாட்டோம் என்று ஒரு குரூப்பும், சின்ன ஐயா வழியில் உறுதியுடன் நிற்போம் என்று ஒரு குரூப்பும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை அறிவிக்கும் வகையில் சில மாற்றங்கள் நடக்கும் என்று தெரிகிறது.

நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் ராமதாஸ், ‘’அன்பு மணியை மத்திய கேபினெட்அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். கட்சியில் அன்புமணி கலக்கத்தை ஏற்படுத்தி, வளர்த்த கிடாவே மார்பில் எட்டி உதைத்து விட்டார். கண்ணாடி பாட்டிலை தூக்கி அம்மா மீது அடித்தார். பொய்யை கூசாமல் அன்புமணி ராமதாஸ் பேசுவார் பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும், செளமியா அன்புமணியும் இரண்டு கால்களை பிடித்தார்கள். இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தனக்கு நீங்கள் தான் கொல்லி வைக்கனும் என அன்புமணி கூறி அழுதார்கள்…’’ என்று அப்பட்டமாக உண்மைகளைப் போட்டு உடைத்தார்.

இது குறித்து பேசும் பாமகவினர், ‘’பாஜக வுடன் கூட்டணி இல்லை என்றால், எனக்கு நீங்க கொள்ளி போட வேண்டி இருக்கும் என்று அன்புமணி பேசியிருக்கிறார் என்றால் அண்ணாமலை டீம் அந்த அளவுக்கு அவரை பயமுறுத்தியிருக்க வேண்டும், வெற்றி வாய்ப்பே இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் தான் கூட்டணி வேண்டும் என அன்புமணி நிற்க காரணம், பாஜகவின் பிளாக்மெயில் அரசியல் நெருக்கடி தானே..? இன்று பழனிசாமிக்கு செய்ததை அன்று அன்புமணிக்கு செய்துள்ளது பாஜக. வன்னியர் என்றால் எதிர்த்து நின்றிருக்க வேண்டும், அதை விட்டு அய்யாவையும் அதில் இழுத்து அவமானம் செய்துவிட்டார்.

ராமதாஸ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் அன்புமணி இன்று முதல் மூன்று நாள்கள் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையை நீடிப்பது சரியில்லை. எனவே, 25 மாவட்ட செயலாளர்களை மாற்றம் செய்து ராமதாஸ் ஒரு பட்டியல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…’’ என்கிறார்கள்.

கடந்த காலம் எப்படியோ, ‘இப்போது பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மோதலுக்கு அவசியம் என்ன?’ என்று தெரியாமல் விழிக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link