Share via:
மூன்றாவது ஆண்டாக கல்வித் திருவிழா நடத்தி மாணவர்களுக்கு பரிசு
வழங்கி, எழுச்சியூட்டும் வகையில் பேசி எல்லோருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர்
விஜய். இந்த விழாவில் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேலாக மலர்ந்த முகத்தோடு விஜய்
கலந்துகொண்டு பேசியதைக் கண்டு ரசிகர்கள் புல்லரித்துப் போயிருக்கிறார்கள்.
அதேநேரம், நேற்று முதல் விஜய்க்கு புதிதாக இளைய காமராஜர் என்று
பட்டம் கொடுத்து அவரது ஐடி விங் ஆட்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரம் அனைத்துக்
கட்சியினரையும் அப்செட் ஆக்கியுள்ளது. வாழ்நாள் முழுவதும் நாடு, மக்கள், போராட்டம்
என்று வாழ்ந்த காமராஜரை இன்னமும் நிகழ்ச்சிகளுக்கு கால்ஷீட் கொடுக்கும் விஜய்யுடன்
ஒப்பிடலாமா என்று கொந்தளிக்கிறார்கள்.
அதேபோன்று நேற்றைய விழாவில் ஆதவ் அர்ஜூனாவும் புஸ்ஸி ஆனந்தும்
பேசிக்கொண்ட ஒரு கிளிப் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அந்த வீடியோவில், ’அண்ணாமலை
நம்பியாவது வருவாங்க. எடப்பாடி பழனிசாமியை நம்பி எவன் கூட்டணிக்கு வருவான்’’ என ஒருமையில்
தெனாவெட்டாகப் பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா.
முன்னாள் முதல்வராகவும் இப்போது அதிமுக பொதுச்செயலாளராகவும் இருக்கும்
எடப்பாடி பழனிசாமியையும், பாஜக தலைவர் அண்ணாமலையையும் ஒருமையில் மோசமான பாடி லாங்கேஜுடன்
பேசுவதைக் கண்டு அவரது கட்சியினர் அதிர்ந்து நிற்கிறார்கள். ‘’அதிமுகவுடன் கூட்டணி
வைத்து திமுகவை தோற்கடிக்கலாம் என்ற ஆசையை உடைத்துப் போடுகிறார். இவரை கட்சியில் இருந்து
வெளியேற்ற வேண்டும்’’ என்று குரல் கொடுக்கிறார்கள்.
இந்த பேச்சுக்கு விஜய் உடனடியாக நடவடிக்கை செய்யவில்லையென்றால்,
தன்னை தானே அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக்கொள்ளும் ஆதவ் அர்ஜூனா, த.வெ.கவை முட்டுச்
சந்திற்கு கொண்டு காலி செய்துவிடுவார் என்கிறார்.
நான் அப்படி பேசவில்லை, யாரோ தவறாக ஆடியோவை சேர்த்திருக்கிறார்கள்
என்று ஆதவ் இன்று விளக்கம் கொடுப்பார் என்கிறார்கள்.