News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மூன்றாவது ஆண்டாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் விழாவில் சுமார் 2000 மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக இன்றும், அடுத்து இரண்டாவது கட்டமாக ஜூன் 4-ம் தேதியும், 3வது கட்டமாக ஜூன் மாதம் 13ம் தேதியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், ‘’உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி. படிப்பில் சாதிக்க வேண்டும். அதனை நான் மறுக்கவில்லை. நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அனைவரும் ஜனநாயக கடமையை சரியாக செய்ய சொல்லுங்கள். நல்லவங்க, நம்பிக்கையானங்க, இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்க. பணம் வாங்காதீர்கள் என்று சொன்னேன் அதனையே கடைபிடிங்க.
வரும் ஆண்டிலும் பணத்தை வந்து கொட்டுவார்கள். அது எல்லாம் உங்க பணம் தான். அதில் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும். தேர்தலில் பணம் வாங்குவதை ஊக்குவிக்காதீர்கள். பெற்றோர்களுக்கு ஒரு கோரிக்கை. குழந்தைகள் மீது எதனையும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு பிடித்ததை படிக்க வையுங்கள்.
சாதி மதம் தொடர்பாக அந்த பக்கமே போயிடாதீங்க. சமீபத்திய தேர்வில் பெரியார் மீதே சாதி சாயம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஏஐ உலகம் வந்துவிட்டது. ஏஐ எதிர்கொள்ளஒன்றே வழி. உறுதியாக இருங்கள்..’’ என்று பேசினார்.

படிப்பு முக்கியம்தான்.. ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் என மாணாக்கர்களுக்கு விஜய் கூறிய அறிவுரையும் யுபிஎஸ்சி தேர்வில் ஈ வே ராமசாமி நாயக்கர் என ஜாதி கேள்வி கேட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பாராட்டும் எதிர்ப்பும் கலந்தே வருகின்றன.

இது குறித்து திமுகவினர், ‘’நீட்தான் உலகமா என்று கேட்கும் சங்கி தற்குறிகளுக்கு.. அனைவருக்குமான மருத்துவக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்குதான் நீட் தேர்வை ஒழிக்க தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. அப்போராட்டத்தை நீர்த்துபோக செய்யும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கனவு அறவே இருக்கக்கூடாது என்று வெளிப்படையாக பேசும் தற்குறிகளுக்கு எதன்மீதும் அக்கறையும், புரிதலும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கல்வியும், எதிர்காலம் குறித்த கனவும் அவரவர் விருப்பம். உங்கள் ஆர்.எஸ்.எஸ் அஜென்ட்டா’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு விஜய் கட்சியினர், “வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதை முடிவாக எண்ணி வருத்தப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம், முன்னேற நிறைய வழிகள் உள்ளது அதை சிந்தியுங்கள்” – இதுவே தளபதி இன்று நீட் பற்றி பேசிய கருத்து சுருக்கம்… புரியாத மங்குனிகளுக்கு இது புரியாது’’ என்று திருப்பியடிக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link