Share via:
விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் பதவியில்
இருந்து விலகியிருக்கும் அருண் ராஜ் ஐ.ஆர்.எஸ். இணைய இருக்கிறார். இதையடுத்து புஸ்ஸி
ஆனந்த் அல்லது ஆதவ் அர்ஜூனா பதவிக்குச் சிக்கல் என தெரிகிறது.
விஜய் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின்
தலைவர் விஜய்க்கு அருண்ராஜ் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்போது அவரது
ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால், விரைவில் தவெக கட்சியின் தலைமையில் முக்கிய
பொறுப்பு அவருக்கு வழங்கப்பட உள்ளது என தகவல். பொதுச் செயலாளர் ஆகும் வாய்ப்பு இருப்பதால்
புஸ்ஸி ஆனந்த் பதவிக்குச் சிக்கல் வரலாம் என்று தெரிகிறது. பொதுச்செயலாளர் பதவி இல்லையென்றால்,
புதிய பதவி உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த அருண்ராஜ் சேலத்தை சேர்ந்த மருத்துவர். இவர் 2009ல் ஐ.ஆர்.எஸ்.
பதவிக்கு வந்து வருமானவரித் துறை அதிகாரியாக சென்னையில் பணியினை தொடங்கியவர். 2016ல்
டிசம்பரில் காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் ரெய்டு நடத்தி ₹ 70 கோடி
ரொக்கம் கைப்பற்றி பாராட்டு பெற்றவர்.
இவர் அம்பேத்கர் மற்றும் ஈவேரா மீது பற்றுகொண்டவர்.. விஜய்க்கும்
எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தவர். சென்னையிலிருந்து திடீரென
2021 மார்ச் மாதம் பீகாருக்கு மாற்றப்பட்டவர். இவர் தனது அரசாங்க வேலையை ராஜினாமா செய்ததாக
அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது. எனவே, எந்த நேரமும் விஜய் கட்சியில் இணைவார்
என்று சொல்லப்படுகிறது.
அரசு வேலையில் குறிப்பாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவி
முடித்தவர்கள் அரசியலுக்கு வருவது அரசுக்கு பெரும் இழப்பு. எனவே, இப்படி வருபவர்களின்
சம்பளத்தை எல்லாம் அரசு பறித்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் கருதுகிறார்கள்.