News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதிமையத்துக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் தனபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுகவில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரும் துணை முதல்வர் உதயநிதி, கனிமொழி, ஆற்காடு வீராசாமி என ஒவ்வொருவரையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்கள். அதேபோல் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட், விசிக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களையும் சந்தித்துவருகிறார்கள்.

புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் எனும் வகையில் ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் சந்திப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லாத நபரை சந்தித்து, அதை வெளியிலும் போட்டிருப்பது கட்சியினருக்கு ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளது. ஆம், அவர்கள் சந்தித்தது அவர்கள் மாப்பிள்ளை சார் சபரீசன்.

சபரீசன் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை அதோடு அரசியல் பதவியிலும் இல்லை. ஆனால், மன்னர் ஆட்சி நடப்பது போன்று சபரீசனை சந்தித்து, அதை போட்டோவாக அதிகாரபூர்வமாக வெளியிட்டிருப்பதும் மன்னராட்சி அரசியல் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள். காலில் விழுந்தார்களா என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.

அதுசரி, இன்பநிதியை பார்த்தாச்சா என்பதே திமுகவினரின் அடுத்த கேள்வி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link