Share via:
நடிகர் விஜய்யை அன்புடன் கட்டிப்பிடித்து
அண்ணாவென்று அன்பு செலுத்தும் மாணவிகள் குறித்து வில்லங்கக் கருத்து கூறியிருக்கிறார்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். இந்த விவகாரத்தில், தமிழக
வாழ்வுரிமை கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! அவரின் மாணவிகள்
மீதான அருவருக்கத்தக்க கருத்தை திரும்ப பெற வேண்டும் இல்லைஎன்றால் கடும்
எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.
பரிசு வழங்கும் விழாவில் மாணவிகள் ஆர்வத்துடன்
விஜய்யைக் கட்டிப்பிடித்து அன்பைப் பொழிகிறார்கள். இதை எப்படி ஒரு தகப்பன் அனுமதிக்கலாம்,
நாளைக்கு கல்யாணமாகிப் போற பொண்ணு இப்படி செய்யலாமா என்று ஆணவமாகப் பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.
இது குறித்து பேசும் விஜய் ரசிகர்கள்,
‘’மாணவிகளை, சிறுமிகளை, பெண் பிள்ளைகளைப் பெற்ற தகப்பன்களை வக்கிரமாக பேசிய திமுக
கூட்டணி கட்சித் தலைவரான காட்டுமிராண்டி வேல்முருகனுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
கடும் கண்டனம். எங்கள் மாணவிகளுக்கு அறிவு மட்டுமல்ல பகுத்தறிவும் எங்களுக்கு
நிறைய இருக்கிறது. சாதிவெறி, பிற்போக்குவாதியான நீங்கள் யார் எங்கள் மகள்களுக்காக
அக்கறைக் கொள்ள? உங்கள் வேலையைப் பார்க்கலாமே? உங்கள் பழமைவாத குப்பையை எதற்காக
எங்கள் மீது கொட்டுகிறீர்கள்?
என் மகள் விஜய்யை அண்ணா என்று
சொல்லுவாள், விருது பெறும் மாணவிகளும் சொல்லுவார்கள், அண்ணனாக அணைப்பார்கள் !
பள்ளி சிறுமிகள், பள்ளி மாணவிகள் தாங்கள் அண்ணனாக நினைக்கும் ஒருவருக்கு
கொடுக்கும் முத்தத்தைக் கூட தவறான பார்வையில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்
உங்கள் மனதில் எவ்வளவு வக்கிரம் இருக்க வேண்டும் ! உங்கள் தகப்பனாரின் சட்டையைப்
பிடித்து “எப்படி இப்படி ஒரு அடிப்படை அறிவில்லாத வக்கிர மூடரை
வளர்த்தீர்கள்?” என்று தான் கேட்க வேண்டும் ! திருமணம் நடக்கும், இன்னொரு
வீட்டிற்கு வாழ போகிறாள் என்று பெண்ணை அடிமைப்படுத்தும் காட்டுமிராண்டி கருத்தைச்
சொல்ல வெட்கமாக இல்லையா
? பெண் பிள்ளையை பெற்ற எங்களுக்கு
இது தெரியாதா? உங்களிடம் யாராவது அறிவுரை கேட்டார்களா? அதுவும் சாதிவெறியரான,
பிற்போக்குவாதியான உங்களிடம் எவர் கேட்பார்? 2 கிராம் தங்கத்திற்கு யாரும் அங்கே
செல்லவில்லை. கடினமாகப் படித்து, வெற்றிப் பெற்று, சாதித்த தன் மகளுக்கு
கிடைக்கும் அங்கீகாரத்தைப் பார்த்து பெருமைப்பட அங்கே பெற்றோர்கள் செல்கிறார்கள்.
ஒரு சீட்டிற்கும், சில நோட்டிற்கும் திமுகவின் பாதங்களில் முத்தம்
கொடுத்துக்கொண்டு திமுகவை அண்டிப்பிழைக்கும் தெம்பில்லாத, முதுகெலும்பில்லாதக்
கோழையான உங்களுக்கு விஜய்யை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது? தைரியம், திராணி,
அறிவு, தெளிவு, வக்கு இருந்தால் அரசியல் ரீதியாக விஜய்யை எதிர்கொள்ளுங்கள்
வேல்முருகா
இப்படியே பிற்போக்குத்தனமாக
பேசிக்கொண்டு இருந்தால் உங்கள் குடும்ப பெண்கள், உறவுக்கார பெண்கள், கட்சியில்
இருக்கும் பெண்கள் கூட உங்களை நோக்கி காரி உமிழ்வார்கள். மன்னிப்பு கேட்கும் வரை விட
மாட்டோம்’’ என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.