Share via:

அண்ணாமலை தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த நேரத்தில் மற்ற தலைவர்கள்
யாருமே பேட்டி கொடுப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தது இல்லை. அதனால் மூத்த நிர்வாகிகள்
அனைவரும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.
தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை அகற்றப்பட்ட பிறகும் அவர் மீண்டும் மீண்டும் பா.ஜ.க.வின்
முகமாக பேட்டி கொடுப்பது புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை செமையாக கடுப்பாக்கியுள்ளது.
இது குறித்து பேசும் பா.ஜ.க.வினர், ‘’இந்தியாவின் போர் நடவடிக்கை
குறித்து நயினார் நாகேந்திரன் பேசுவது மட்டுமே இன்றைய சூழலில் சரியாக இருக்கும். ஆனால்
அண்ணாமலை தலைவர் பேச்சை மதிக்கவே செல்லாமல் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். இன்று
தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘பாகிஸ்தான் தொடுத்த தாக்குதலில்
இந்தியாவின் முக்கிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அண்ணாமலை இதை
எப்படி வெளியிடலாம் என்று பா.ஜ.க.வினரும் கோபம் அடைகிறார்கள். இந்தியர்கள் அனைவரும்
அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக இருக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த போர் இப்போதைக்கு முடியப்போவதில்லை என்பதை அண்ணாமலை கூறியிருக்கும்
நிலையில், நயினார் நாகேந்திரன் அடுத்த கட்ட மூவ் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.
ஒரு சாதாரண தொண்டன் என்று சொல்லிக்கொண்டே நயினாரை காலி செய்கிறாரே அண்ணாமலை.