Share via:
டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை ரெய்டு சட்டவிரோதமானது
என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டிருக்கிறது. அதனால், இந்த பிரச்னை
முடிவுக்கு வரும் வரையில் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறாது என்றே கருதப்பட்டது.
இதை பொய்யாக்கும் வகையில் இன்று காலைசென்னை, விருகம்பாக்கம், சாலிகிராமம், தி.நகர்,
அசோக் நகர் உள்ள 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுகவுக்காக பிளாக்ஷிப் நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நேரத்தில்,
பணப்பரிமாற்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை குறிவைத்து இந்த சோதனை
நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், இன்னமும் அமலாக்கத்துறையில் இருந்து நேரடியாக
எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இன்று அமலாக்கத்துறை சிஆர்பிஎப் உதவியுடன் சோதனையை நடத்தி வருகிறது.
அசோக் நகரில் உள்ள என்சி எஸ் டெக்னாலாஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில்
இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் வீடு மற்றும்
அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள தொழில் அதிபர் வீட்டில்
சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவனம் மருத்துவத்துறை சார்ந்த உபகரணங்கள்
விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் இயக்குநர் ஏகே நாதன் என்பவரது
வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கோயம்பேட்டில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை
சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யப்பட்ட நிறுவனங்களில்
சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையில் காலை முதலே நடைபெற்று வரும் இந்த
அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தெரியவந்ததிலிருந்து
திமுகவினர் திகிலில் இருக்கிறார்கள்.