News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

2026-ல் அரியணை ஏறப்போகும் நமக்கான தலைவர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் 7.5% எனும் நாடுபோற்றும் உள்இடஒதுக்கீட்டால் சமநீதி காத்த “புரட்சித் தமிழர்” என்றெல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பாராட்டுகளைக் குவித்துக்கொணு இருக்கிறார்கள்.

நேற்றைய தினமே பா.ஜக.வை சேர்ந்த அண்ணாமலை தொடங்கி நயினார் நாகேந்திரன் வரையிலும் வாழ்த்து செய்தி அனுப்பிவிட்டார்கல். அதேநேரம், இன்னமும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வாழ்த்து சொல்லவில்லை. விஜய் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இன்று சீமான், ‘’நாம் தமிழர் கட்சி சார்பாக நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் இறையோன் முருகப்பெருமானின் வழிபாட்டுத் திருவிழாவான தைப்பூசத்திற்குப் பொது விடுமுறை அளித்தது, அழிவின் விளிம்பிலிருந்த காவிரிப் படுகை மாவட்டங்களை மீட்டெடுக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தது, நீட் தேர்வு பாதிப்புகளிலிருந்து கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை ஓரளவாவது பாதுகாக்கும் வகையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது, தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டுவந்தது என அரும்பணிகள் பல ஆற்றிய ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் உடல் நலனுடனும், உள்ள மகிழ்வுடனும் நலமோடு வாழ்ந்து மக்கள் தொண்டாற்றிட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ‘’எவ்வித பின்புலமும் இன்றி, ஒற்றை ஆளாக, அனுதினமும் போராடி, எதிர்நீச்சல் போட்டு, அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்து, சுயம்புவாக அதிமுகவின் பொதுச்செயலாளராக வளர்ந்து நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழகத்தை பீடித்திருக்கக் கூடிய பிணியான, திமுக ஆட்சியை அகற்றி, அடுத்த பிறந்தநாளை முதல்வராக கொண்டாட வாழ்த்துக்கள்..’’ என்று சவுக்கு சங்கர் வாழ்த்தியிருக்கிறார்.

மத்தவங்களையும் வாழ்த்தச் சொல்லுங்கப்பா.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link