News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 100/100 வாங்கியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்க்கொழுப்புடன் பேசியிருக்கும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

நாராயணன் திருப்பதி, ‘’சமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 போன்ற முடிவுகள் சாத்தியம் இல்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இதை தவறு என்று சுட்டிக்காட்டி உண்மையை வெளிக்கொண்டு வர யாருமில்லாதது வேதனையளிக்கிறது. தேர்வுக்கு முன்னரே கேள்வி தாள்களை மாணவர்களிடம் அளித்திருந்தால் கூட 167 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையில், விடைகளை முன்னரே தயார் செய்து மாணவர்களிடத்தில் கொடுத்து விட்டனரா? அல்லது விடைத்தாள்களே மாற்றி வைக்கப்பட்டனவா என்ற கேள்விகளும் எழாமலில்லை.

குறிப்பிட்ட பாடம் குறித்து அறியாமலே அல்லது புரியாமலே தேர்வு எழுதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எப்படி கல்வியை முறைப்படி கற்பார்கள்? பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு கூட வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதற்கு காரணம், இது போன்ற அரசியல் அராஜகங்களினால் தான் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் மகன் மெத்த படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று ஆதங்கப்படும் பெற்றோர்கள், அதற்கு காரணம் தரம் இல்லாத கல்வி தான் என்பதை உணர வேண்டும்.

 இயல்பாக படித்து தேர வேண்டிய மாணவர்களை செயற்கையாக மதிப்பெண்கள் பெற வைப்பது மாணவர்களை சீரழிக்கும் செயல் என்பதையும் அடுத்த தலைமுறையை ஒழிக்கும் செயல் என்பதையும் அரசு உணர வேண்டும். 100/100 மற்றும் 99 பெற்ற மாணவர்கள், நீட் போன்ற தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற காரணமே மாணவர்களுக்கு உரிய கல்வியை போதிக்காமல், மதிப்பெண்களை மட்டுமே வழங்கி சீரழிப்பதால் தான் என்பது தெளிவாகிறது. 100 மதிப்பெண்கள் பெற்றவர் எப்படி நீட் தேர்வில் தோல்வியுறுவார் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த மோசடி, முறைகேடே பதில். மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இந்த முறைகேடுகளை களைந்து, தரமற்ற கல்வி முறையை அகற்றி, முறையான கல்வியை நம் மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமே நம் அடுத்த தலைமுறை முன்னேறும் என்பதை திராவிட மாடல் அரசு உணரட்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

இதற்கு கடுமையான விமர்சனஙள் எழுந்துள்ளன. ’’தமிழ்நாட்டு குழந்தைகள் 100/100 மதிப்பெண் எடுத்தால் அது முறைகேடு என்று அசிங்கப்படுத்துகிறது பாஜக. உங்களுக்கும், உங்கள் கூட்டத்தாருக்கும் மூளை இல்லாமல் இருக்கலாம். அதற்காக தமிழ்நாட்டு பிள்ளைகள் 100/100 எடுப்பதை ஊழலாக சித்தரிப்பது அயோக்கியத்தனம். CBSE மாணவர்கள் 100/100 மதிப்பெண் எடுக்கும்போது மூடிக்கொண்டு இருக்கும் சங்கிகள், தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் முழு மதிப்பெண் எடுத்தால் எரிச்சலில் கொச்சைப்படுத்துவது சீழ்பிடித்த பார்ப்பனிய மனநிலையின் வெளிப்பாடு.

தமிழ்நாட்டு பிள்ளைகள் படித்தால், அதிக மதிப்பெண் எடுத்தால் பாஜகவுக்கு துளியும் பிடிக்காது என்பதற்கு சான்று இது. நீயெல்லாம் படிக்க வந்துட்டியா ? என்று கேட்ட ஈராயிரம் ஆண்டு கால இனப்பகையின், இன்றைய அழுகுரல் தான் நீங்கள் எல்லாம் 100/100 எடுப்பதா என்கிற கதறல். வித்தியாலயாவில் அவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் பாராட்டுவதும் ஏழை பிள்ளைகள் படித்தால் வயிற்றெரிச்சல் படுவதும் கேவலமான மனநிலை’’ என்று கடுமையாக விமர்சனம் வைக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வித் துறை மீது குற்றம் சுமத்தியிருக்கும் திருப்பதி நாராயணன் மன்னிப்பு கேட்பாரா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link