Share via:
எப்படியாவது உதயநிதிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டி கைது செய்ய
வேண்டும் என்பதற்காகவே அமலாக்கத்துறை ரெய்டு நடந்திருப்பதாகவும், வாட்சப் ஸ்கிரீன்ஷாட்
கிழித்து வீசப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது.
நேற்று நடந்த அமலாக்கத்துறை ரெய்டை அடுத்து அ.தி.மு.க.வினர்,
‘’டாஸ்மாக் எம்.டி. வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய
விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின்
நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு
Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?
டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு
என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்? உதயநிதியுடன்
டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?
டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு
அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய Power Center-ஆ?
Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு
Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை. இவர் துணை முதல்வருக்கு
இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா? ரத்தீஷை நெருங்கும்
ED-யின் விசாரணை வளையம்…. So, Sketch உதயநிதிக்கா? யார் இந்த தியாகி எனவும், இந்த
தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த “சார்” யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.
கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்…’’ என்று
கேள்வி எழுப்பியிருக்கிறது.
அதேநேரம் தி.மு.க.வினர், ‘’டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை
ரெய்டில் விசாகன் IAS வீட்டின் அருகில் கிழித்து வீசப்பட்டதாக வெளியான போட்டோவைப் பார்க்கும்போதே
அவை செட்டப் செய்யப்பட்டவை என்பது நன்றாகத் தெரிகிறது. ஏனென்றால் video &
photo. WhatsAppல 5 Jan 2024 னு தான் வரும். 05-01-2024 என்று வராது. எவனோ முட்டாள்
ஒருவன் தப்புத்தப்பாக ஸ்கிரீன்ஷாட் செட்டப் செய்து கொடுத்திருக்கிறான்’’ என்று கிண்டல்
அடிக்கிறார்கள்.
இதுகுறித்து பத்திரிகையாளர் அரவிந்தாக்ஷன், ‘’அமலாக்கத்துறை சோதனைக்கு
சென்ற இடத்திற்கு கையோடு ஊடகங்களையும் அழைத்துச் சென்றிருப்பது இதுவே முதல் முறை..
தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே ஒரு பத்திரிகையாளருக்கு கூட விசாகன் IAS வீடு மனப்பாக்கத்தில்
தான் அமைந்துள்ளது என்று தெரிந்திருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.. ஆகவே ED அதிகாரிகளோ,,அல்லது
ED அதிகாரிகள் கொஞ்சிக்குலாவும் பாஜகவை சேர்ந்த பிரமுகர்களோ தான் லொகேஷனை கசியவிட்டு
இந்த சிறப்பாக சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்
அதைவிட பேராச்சர்யம் என்னவென்றால், எந்தவொரு முட்டாளாவது வாட்ஸ்அப்
உரையாடல்களை Screenshot எடுத்து, அதை JPG -Format-ல் இருந்து PDF ,Format-ற்கு மாற்றி
Print எடுத்து அதை வீட்டிற்கு எடுத்துச்சென்று இப்படி அரையும் குறையுமாக கிழித்து வீட்டிற்கு
அருகிலேயே வீசுவார்களா !? நிச்சயம் மாட்டார்கள்.. அதுவும் ஒரு IAS அதிகாரி இப்படியொரு
அடி முட்டாத்தனமான வேலையை நிச்சயம் செய்யமாட்டார் மேலும், விசாகன் IAS வீட்டின் அருகில்
இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் உரையாடல் ஆவணங்கள் அனைத்தும் மிகநேர்த்தியாக
கம்ப்யூட்டரில் சேகரித்து Print எடுக்கப்பட்டவை.. ஆக,இந்த பேப்பர்களை யாரோ வேண்டுமென்றே
விசாகன் IAS வீட்டின் அருகில் கிழித்து வீசியுள்ளனர்.. இதில் தமாஷ் என்னவென்றால் உதயநிதிக்கு
மலர்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை Print எடுத்து,அந்த பேப்பரை வீட்டிற்கு கொண்டு
சென்று அதையும் கிழித்து வீசியிருக்கிறார் விசாகன் IAS… இப்படியொரு மட்டமான
Planted Drama-வை மத்திய அரசின் ஆகப்பெரும் அதிகாரமிக்க ஏஜென்சி செய்துள்ளதென்று சொல்லவில்லை’’
என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம், ‘’அமலாக்கத்துறை உள்ளே நுழைந்த பிறகு, ரதீஷுக்கு ED
சோதனை விபரங்களை சொல்லி, ரதீஷ் குடியிருந்த எம்.ஆர்.சி நகர் 174 சீப்ராஸ் இல்லத்திலிருந்து,
சர்வீஸ் லிப்ட் வழியாக விமான நிலையம் வரை தப்பிக்க வைத்த தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் யார்’’
என்று சவுக்கு சங்கர் எழுப்பியிருக்கும் கேள்வியும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
திமுகவுக்கு சிக்கலோ சிக்கல்