Share via:

பூத் கமிட்டி கூட்டம் நடத்திய நடிகர் விஜய் நாளை மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி குறித்து
தெளிவான அறிவிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும்
நம்பிக்கையுடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி நடத்திவருகிறார் நடிகர் விஜய்.
விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்ற விஜய்
மாநாடு அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டியது.
அதேநேரம் அடுத்த படம் ரிலீஸ்க்குப் பிறகே நேரடி அரசியலுக்கு வருவார்
என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்றார். அதற்கு
மதுரை விமான நிலையத்திற்கு சென்ற போதும், திரும்பிய பிறகும் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி
மாஸ் காட்டினார்.
திருமாவளவன் திரும்பத்திரும்ப விஜய்யுடன் கூட்டணி இல்லை என்று
சொல்லிவருகிறார். அதேநேரம் விஜய்க்கு பா.ஜ.க. தொடர்ந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்துவருகிறது.
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதற்கு விஜய் விருப்பமுடன் இருக்கிறார் என்று சொல்லப்பட்ட
நிலையில், இனி, அந்த கூட்டணியில் விஜய் சேர்வதற்கு வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுகிறது.
எடப்பாடி பழனிசாமி, விஜய், பா.ஜ.க. கூட்டணி உருவானால் தமிழகத்தில்
ஸ்வீப் ஆக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையில் மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. சென்னை, பனையூரில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
தலைமையில் நாளை காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த
கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு கூட்டணி ஆலோசனை கேட்பார் என்றும் கருத்து சொல்வார்
என்றும் கூறப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் நாளைய கூட்டத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள்.
அதேநேரம் திமுகவினர், ‘’நாளைய கூட்டத்தில் விஜய் முதலில் கலந்துகொள்வாரா
என்று பாருங்கள். அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பவர் போன்று அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்’’
என்று கிண்டல் செய்கிறார்கள்.