Share via:

துணைவேந்தர் நியமனம் மற்றும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது
ஆகியவை தொடர்பாக தி.மு.க. வழக்கில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உடன்பிறப்புகள்
வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி
ஜனாதிபதி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். இதனால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றம்
தள்ளிப்போகிறது என்கிறார்கள்.
இந்த வாரம் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறார் என்று
ஒரு பேச்சு உலவியது. புதிய கவர்னர் நியமனத்துக்கு டெல்லியில் ஆலோசனை நடப்பதாகவும் இன்னும்
ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம்
தள்ளிப்போகும் என்றே தெரிகிறது. ஏனென்றால் ஜனாதிபதி தமிழக கவர்னரை நோக்கி உச்சநீதிமன்றம்
கொடுத்த உத்தரவுகளுக்கு விளக்கம் கேட்டிருக்கிறார்.
இது குறித்து என்று கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் பதிவில்,
‘’தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு
விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த விளக்கத்தை கேட்டுள்ளார்.
Presidential
reference to Supreme Court அரசியல் சாசன பிரிவு 143(1) மூலம் ஜனாதிபதி வழியாக மத்திய
அரசு அணுகி உள்ளது. அதாவது மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த விவகாரத்தில்
கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள்
குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம் உச்சநீதிமன்றத்திடம்
ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை எழுப்பினார் குடியரசுத் தலைவர் திரெளபதி
முர்மு.
1988ம் ஆண்டுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை
குடியரசுத் தலைவர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது’’ என்று கூறியிருக்கிறார். எப்படியோ
ஆளுநர் ரவி தப்பிக்கொண்டே இருக்கிறார்.